• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கட்சி சின்னம் முடக்கம்; பல்டி அடித்த வேட்பாளர்… மம்தா பானர்ஜிக்கு அடுத்தடுத்து விழுந்த அடி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கட்சி சின்னம் முடக்கம்; பல்டி அடித்த வேட்பாளர்… மம்தா பானர்ஜிக்கு அடுத்தடுத்து விழுந்த அடி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்புமனு திரும்பப் பெற இறுதி நாளான இன்று, திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி தரப்பின் நந்திகிராம் வேட்பாளர் சஞ்சிதா டே பிரதான் திடீரென அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரியைச் சந்தித்துவிட்டு, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார். இது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு, திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் என மம்தா பானர்ஜி அறிவித்திருப்பதும் பெரும் கவனம் பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மாநிலத்தின் முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவி ஏற்றார். பாஜகவில் இப்படியான செயல்கள் நடந்துவர, தேர்தலில் தோல்வி அடைந்து எதிர்க்கட்சியாக அமர்ந்த திரிணாமுல் காங்கிரஸில் அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி ஆகியோர் தலைமையில் தனி அணி உருவானது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இதில், மம்தா பானர்ஜி தரப்பில் இருந்து நந்திகிராம் தொகுதி வேட்பாளராக சஞ்சிதா டே பிரதான் அறிவிக்கப்பட்டு, அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.

வேட்புமனு பரிசீலனைகள் முடிந்து, திரும்பப் பெறுவதற்கு இன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், இன்று சஞ்சிதா டே பிரதான் திடீரென அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரியைச் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். இது அம்மாநில அரசியலிலும், மம்தா பானர்ஜி தரப்பு திரிணாமுல் காங்கிரஸ் தரப்புக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதற்கிடையில், அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்பில் இருந்து தங்களுக்கே திரிணாமுல் காங்கிரஸ் சொந்தம் என போர் கொடி தூக்கியது. அதேசமயம், கட்சியின் தலைவரான தங்கள் தரப்புக்கே கட்சியும், சின்னமும் சொந்தம் என மம்தா பானர்ஜி தரப்பு வாதிட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் இரண்டு தரப்பும் பயன்படுத்த தடை விதித்து முடக்கியது.

தொடர்ந்து மம்தா பானர்ஜி பிரிவுக்கு ‘கால்பந்து வீரர்’ சின்னத்தையும், ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரையும் ஒதுக்கி உத்தரவிட்டது. இதேபோல், எதிர் தரப்பான ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரையும், ‘கடித உறை’ சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதற்குள் மம்தா பானர்ஜி தரப்பு நந்திகிராம் வேட்பாளர் சஞ்சிதா தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.

இதன் காரணமாக தற்போது நந்திகிராம் இடைத்தேர்தலிலும், அசாம் இடைத்தேர்தலிலும் காங்கிரஸுக்கு ஆதரவு தரவதாக மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Read More

Previous Post

ஈஸ்டர் தாக்குதல் : றிஷாட் பதியுதீன் நாளை விளக்கம்

Next Post

டிரம்ப்க்கு ஆட்டம் காட்டும் சீனா.. தங்கத்தை மலை மலையாய் வாங்கி குவிப்பு.. இந்தியா ஒரு படி மேல்! | US Debt Reaches $40 Trillion: China Cuts US Treasuries to Buy Gold While India Surges Reserves by 58%

Next Post
டிரம்ப்க்கு ஆட்டம் காட்டும் சீனா.. தங்கத்தை மலை மலையாய் வாங்கி குவிப்பு.. இந்தியா ஒரு படி மேல்! | US Debt Reaches $40 Trillion: China Cuts US Treasuries to Buy Gold While India Surges Reserves by 58%

டிரம்ப்க்கு ஆட்டம் காட்டும் சீனா.. தங்கத்தை மலை மலையாய் வாங்கி குவிப்பு.. இந்தியா ஒரு படி மேல்! | US Debt Reaches $40 Trillion: China Cuts US Treasuries to Buy Gold While India Surges Reserves by 58%

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin