• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதால் 3 மாத சிறையா? சுதந்திரம் சுருங்கிவருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை | No law bans eating chicken over Ganga: SC judge Ujjal bhuyan slams arrest of Muslim students

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கங்கையில் பிரியாணி சாப்பிட்டதால் 3 மாத சிறையா? சுதந்திரம் சுருங்கிவருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை | No law bans eating chicken over Ganga: SC judge Ujjal bhuyan slams arrest of Muslim students
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vignesh Selvaraj

Time
Published: Sunday, July 26, 2026, 18:02 [IST]

போபால்: இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கவலை தெரிவித்துள்ளார். கங்கை ஆற்றில் படகு சவாரி செய்தபோது, ​​சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக முஸ்லிம் மாணவர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்துள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது, “கங்கை நதியில் படகில் வைத்து அசைவம் சாப்பிடுவது சட்டப்படி குற்றமில்லை. ஆனால் பாஜக அரசின் காவல்துறை, புனித நதியை அசுத்தம் செய்வதாக கூறி 14 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு 3 மாதம் சிறையில் கழித்தனர்.

No law bans eating chicken over Ganga SC judge Ujjal bhuyan slams arrest of Muslim students

இந்த சம்பவம் தேசத்தின் குடிமக்கள், அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கிய சட்டப்பூர்வ உரிமையின் கீழ் செயல்படும்போதும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் தொடர்ச்சியான ஒரு போக்கை காட்டுகிறது.

இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவரின் பார்வையை பகிர்ந்து கொள்ளவும், அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தற்கான சுதந்திரம் உள்ளது. விவாதமும், மாற்றுக்கருத்தும் தான் ஜனநாயகத்தின் சாரம். துரதிஷ்டவசமாக அது குற்றமாக மாற்றப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் குறித்துக் கவலை தெரிவிப்பவர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படுகின்றனர். வளாகப் போராட்டங்களுக்காக மாணவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்படுகின்றனர், ஜாமீனும் கிடைப்பதில்லை என்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் சுட்டிக்காட்டினார்.

“நீதிமன்றங்கள் செவிசாய்த்து ஜாமீன் வழங்கினாலும், பல சமயங்களில் அது தாமதமாகவே வழங்கப்படுகிறது. ஆனால், ஜாமீன் வழங்கும்போது விதிக்கப்படும் கட்டுப்பாட்டு நிபந்தனைகளே பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. இத்தகைய கட்டுப்பாட்டு உத்தரவுகள் மூலம், நீதிமன்றங்கள் குடிமக்களிடம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டாம் என்று மறைமுகமாகக் கூறுகின்றனவா அல்லது அவர்களை ஊக்கமிழக்கச் செய்கின்றனவா?” என்று அவர் பேசியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதியில் ஒரு படகில் நடைபெற்ற இஃப்தார் விருந்தின் போது இறைச்சி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசினார்கள் என்ற குற்றச்சாட்டில் 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டித்தான் உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேசியுள்ளார்.

English summary

Supreme Court justice Ujjal Bhuyan has said that there is no law barring anyone from eating chicken over the Ganga, criticising the arrest of Muslim students over the consumption of chicken biryani in iftar while on a boat ride in the river in Uttar Pradesh a few months ago.

Read More

Previous Post

நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பிக்கு பறந்த உத்தரவு

Next Post

ஓடிடி டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்த அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ திரைப்படம் | Makkal Osai

Next Post
ஓடிடி டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்த அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ திரைப்படம் | Makkal Osai

ஓடிடி டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்த அர்ஜுன் தாஸின் 'கான் சிட்டி' திரைப்படம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin