• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ஓட்டுக்காக தவெக 1 ரூபாய் கூட தரல.. திமுக சொல்வதை பெ.சண்முகம் பேசுகிறார்” – சிடிஆர் நிர்மல்குமார் | TVK Did Not Pay a Single Rupee for Votes: Minister CTR Nirmal Kumar Challenges P Shanmugam

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“ஓட்டுக்காக தவெக 1 ரூபாய் கூட தரல.. திமுக சொல்வதை பெ.சண்முகம் பேசுகிறார்” – சிடிஆர் நிர்மல்குமார் | TVK Did Not Pay a Single Rupee for Votes: Minister CTR Nirmal Kumar Challenges P Shanmugam
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vignesh Selvaraj

Time
Published: Saturday, October 3, 2026, 11:10 [IST]

கோவை: “ஓட்டுக்காக தவெக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. திமுகவினர் கூறும் தவறான தகவல்களை பெ.சண்முகம் பேசி வருகிறார். அவர் தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்” என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், “ஸ்டாலின் தன்னுடைய உண்மையான முகத்தை நேற்று பிரச்சாரத்தில் வெளிப்படுத்தி இருந்தார். தந்தையும், மகனும் தம் மனதில் இருப்பது மற்றும் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெறப்போவது கிடையாது. எல்லா தேர்தலிலும் தோல்வி தான்.

TVK Did Not Pay a Single Rupee for Votes Minister CTR Nirmal Kumar Challenges P Shanmugam

ஸ்டாலின் பேச்சு பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் தருவோம். விரக்தியில் பேசி வருகின்றனர். சமூகத்துக்கு திமுகவினர் கேடு விளைவிக்கின்றனர். இவர்கள் விரட்டி அடிக்கப்பட வேண்டிய நபர்கள். ஸ்டாலினும், உதயநிதியும் தங்கள் வக்கிரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தவெக வேட்பாளர், பட்டியலின பெண் குறித்து ஸ்டாலின் மோசமாக பேசி இருக்கிறார். ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசத் தொடங்கி இருக்கிறார். தவெக பெண் வேட்பாளரை உருவகேலி செய்த ஸ்டாலின் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க
வேண்டும்.

தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. திமுகவினர் கூறும் தவறான தகவல்களை பெ.சண்முகம் பேசி வருகிறார். தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்றால் அதனை பெ.சண்முகம் நிரூபிக்க வேண்டும். எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக தவெக சார்பில் போராட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமிக்கு இனி எப்போதும் வெற்றி கிடைக்காது. திமுக, அதிமுக, பாஜக இணைந்து தேர்தலை சந்திக்கும் நிலை வரும்.

முதலமைச்சர் வருகையின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே செலவு செய்யப்படுகிறது. மின்சாரம் கொள்முதலுக்கான நீண்டகால ஒப்பந்தங்கள் 2, 3 மாதங்களில் கையெழுத்தாகும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், “தவெக, திமுக, அதிமுக ஆகியவை பணம் விநியோகம் செய்வதாக மக்களே சொல்கிறார்கள். தூய சக்தி நாங்கள்தான் என தமிழக முதல்வர் விஜய் தொடர்ந்து சொல்வதற்கு நேர் எதிராக வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறது. இது தூய சக்தி அடையாளத்தை அழித்து ஒழிக்கிறது. தவெகவுக்கு ஆதரவாக தேர்தல் களம் இல்லை. போட்டி கடுமையாக உள்ளதால் விஜய் தெருத் தெருவாக செல்கிறார்” எனப் பேசியிருந்தார்.

English summary

“TVK did not pay even a single rupee for votes. P Shanmugam is spreading false information propagated by the DMK; he must prove his allegation,” said Minister CTR Nirmal Kumar.

Read More

Previous Post

அநுர அரசிற்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம்!

Next Post

ஆசிய விளையாட்டு 2026: மல்யுத்தத்தில் மிரட்டிய தீபக் புனியா! 97 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post
ஆசிய விளையாட்டு 2026: மல்யுத்தத்தில் மிரட்டிய தீபக் புனியா! 97 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

ஆசிய விளையாட்டு 2026: மல்யுத்தத்தில் மிரட்டிய தீபக் புனியா! 97 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin