Last Updated:
ஏத்தர், ரிவோல்ட் மற்றும் ஓலா போன்ற நிறுவனங்களின் பைக்குகளுக்குப் போட்டியாக இந்த எவோர் களம் இறங்கியுள்ளது.
இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன (EV) சந்தையில், குஜராத்தைச் சேர்ந்த ‘எவோர்’ (Avore) என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட்அப் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கான Avore EX தொடரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ‘எவோர் ஈஎக்ஸ்’ சீரிஸில் EX 1, EX 2, EX 2S என மொத்தம் 3 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அடிப்படை மாடலான EX 1-ன் தொடக்க விலை ரூ. 1.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இடைநிலை மாடலான EX 2-ன் விலை ரூ. 1.46 லட்சம், மற்றும் டாப்-எண்ட் மாடலான EX 2S-ன் விலை ரூ. 1.70 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவற்றை வெறும் ரூ. 799 முன்பணத்தில் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
EX 1: இதில் 3.24 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 160 கி.மீ மைலேஜ் (IDC Range) வழங்கும் மற்றும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீ ஆகும்.
EX 2: இது பெரிய 5 kWh பேட்டரியுடன் வருகிறது. இது 255 கி.மீ மைலேஜ் தரும்.
EX 2S (டாப் மாடல்): இதில் 5 kWh பேட்டரி இடம்பெற்றுள்ளது, இது ஒற்றை சார்ஜில் அதிகபட்சமாக 260 கி.மீ ரேஞ்ச் (IDC Range) வழங்கும் என ஏவோர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 114 கி.மீ.
இந்த பைக்குகளை 15A ஹோம் சாக்கெட் மூலம் எளிதாகச் சார்ஜ் செய்யலாம். இதன் பேட்டரியை 20% முதல் 80% வரை சார்ஜ் செய்ய சுமார் 2 மணி நேரம் மட்டுமே ஆகும். இதில் 7 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 5 ரைடிங் மோடுகள், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் பாதுகாப்பிற்கான பிரத்யேக அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சந்தையில் ஏத்தர், ரிவோல்ட் மற்றும் ஓலா போன்ற நிறுவனங்களின் பைக்குகளுக்குப் போட்டியாக இந்த எவோர் ஈஎக்ஸ் இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது

