‘ஃபீல்டிங் செய்கிறார்.. பேட்டிங் செய்யும்போது மட்டும் ஏன்’
“அவர் முயற்சி செய்கிறார். தோனியால் 10 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் செய்ய முடியாது என்றும் ஸ்டீபன் பிளமிங் கூறினார். ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, 20 ஓவர்களுக்கு மேல் பீல்டிங் செய்ய முடியும், அங்கு நீங்கள் மேலும் கீழும் உட்கார்ந்து, கேட்ச்களை எடுக்க டைவ் அடிக்க வேண்டும், ரன் அவுட் செய்ய வேண்டும், அப்போது முழங்கால் வலிக்காதா? ஆனால் அணியின் வெற்றிக்கு உதவும் போது, நீங்கள் 10 ஓவர்கள் பற்றி பேசுகிறீர்கள். அவரைச் சுற்றியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன, ஆனால் அணிக்கு எதுவும் வேலை செய்யவில்லை. அவர்கள் ஒரு சரியான முடிவை எடுத்து, அவர் வெளியேற வேண்டும் என்பதையும் அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், “என்று மனோஜ் திவாரி கூறினார்.

