Last Updated:
சிஎஸ்கே-வின் தூணாகப் பார்க்கப்படும் தோனி, ஆடாத நிலையில் அணி அதிக அளவில் தோல்விகளை சந்தித்தது. அவர் இல்லாத அணியை நினைத்துக் கூட பார்க்க சிஎஸ்கே வீரர்கள் விரும்புவதில்லை.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே, காயம் காரணமாக இனி எஞ்சியிருக்கும் போட்டிகளில் விளையாட மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஆயுஷ் மாத்ரே ரன் எடுக்கும்போது காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றாக ஆடிக் கொண்டிருந்தது ஆயுஷ் மாத்ரே மட்டும்தான், ஆனால் அவரும் போய்விட்டாரே என கவலை தெரிவித்து வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.
அதுமட்டுமின்றி சிஎஸ்கே பவுலர்களில் ஓரளவுக்கு திறம்பட செயல்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவுக்கும் காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே-வின் தூணாகப் பார்க்கப்படும் தோனி, ஆடாத நிலையில் அணி அதிக அளவில் தோல்விகளை சந்தித்தது. அவர் இல்லாத அணியை நினைத்துக் கூட பார்க்க சிஎஸ்கே வீரர்கள் விரும்புவதில்லை. அவர் ஆடாதது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது போதாதென பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் பிரெவிஸும் ஐதராபாதுக்கு எதிரான போட்டிக்கு முந்தைய ஆட்டம் வரை காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்தார். இதுதவிர ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே, நேத்தன் எல்லிஸ், ஸ்பென்சர் ஆகியோரும் காயம் காரணமாக விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
Chennai,Tamil Nadu


