• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை ஆர்சிபி எளிதில் வீழ்த்தியது எப்படி? | How RCB easily defeated Punjab kings in IPL qualifier 1

GenevaTimes by GenevaTimes
May 30, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஐபிஎல் தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை ஆர்சிபி எளிதில் வீழ்த்தியது எப்படி? | How RCB easily defeated Punjab kings in IPL qualifier 1
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முலான்பூர்: ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்​றில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி.

ஐபிஎல் தொடரில் முலான்​பூரில் நேற்று நடை​பெற்ற பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் – ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​கள் மோதின. டாஸ் வென்ற ஆர்​சிபி அணி​யின் கேப்​டன் ரஜத் பட்​டி​தார் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். அந்த அணி​யில் நூவன் துஷாரா நீக்​கப்​பட்டு ஜோஷ் ஹேசில்​வுட் சேர்க்​கப்​பட்​டார். பஞ்​சாப் அணி​யில் ஒரே ஒரு மாற்​றம் இருந்​தது. மார்கோ யான்​சனுக்கு பதிலாக அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் சேர்க்​கப்​பட்​டார்.

பேட்​டிங்கை தொடங்​கிய பஞ்​சாப் அணி, ஆர்​சிபி​யின் பந்​து​வீச்சை தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் மளமளவென விக்​கெட்​களை பறி​கொடுத்​தது. பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்​களில் யாஷ் தயாள் பந்​தை, கவர் திசை​யில் அடிக்க கிருணல் பாண்​டி​யா​விடம் எளி​தாக கேட்ச் ஆனது. மற்​றொரு தொடக்க வீர​ரான பிரப்​சிம்​ரன் சிங் 18 ரன்​கள் சேர்த்த நிலை​யில் புவனேஷ்வர் குமார் பந்தை விளாச முயன்ற போது விக்​கெட் கீப்​பரிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார்.

கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 ரன்​களில் ஜோஷ் ஹேசில்​வுட் பந்தை விளாச முயன்ற போது விக்​கெட் கீப்​பரிடம் கேட்ச் ஆனது. தொடர்ந்து ஜோஷ் இங்​லிஷ் 4 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோஷ் ஹேசில்​வுட் பந்தை டீப் ஃபைன் லெக் திசை​யில் விளாசிய போது புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்​கிய நேஹல் வதேரா 8 ரன்​களில் யாஷ் தயாள் பந்​தில் ஸ்டெம்​பு​கள் சிதற நடையை கட்​டி​னார்.

இதன் பின்​னர் சஷாங் சிங் 3 ரன்​களில் சுயாஷ் சர்மா பந்​தில் போல்​டா​னார். சற்று தாக்​குப்​பிடித்து விளை​யாடிய மார்​கஸ் ஸ்டா​யினிஸ் 17 பந்​துகளில், 2 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் 26 ரன்​கள் விளாசிய நிலை​யில் சுயாஷ் சர்மா பந்​தில் ஸ்டெம்பை பறி​கொடுத்​தார். அறி​முக வீர​ராக களமிறங்​கிய முஷிர் கானை ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் எல்​பிடபிள்யூ முறை​யில் பெவிலியனுக்கு திருப்​பி​னார் சுயாஷ் சர்​மா.

இதைத் தொடர்ந்து ஹர்​பிரீத் பிரார் 4 ரன்​களில் ரோமாரியோ ஷெப்​பர்டு பந்​தில் போல்​டா​னார். மட்​டையை சுழற்ற முயன்ற அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் 12 பந்​துகளில், ஒரு பவுண்​டரி, ஒரு சிக்​ஸருடன் 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் கடைசி வீர​ராக ஜோஷ் ஹேசில்​வுட் பந்​தில் விக்​கெட்​கீப்​பரிடம் பிடி​கொடுத்து வெளி​யேற பஞ்​சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்​களில் 101 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

ஆர்​சிபி அணி தரப்​பில் சுயாஷ் சர்​மா, ஜோஷ் ஹேசில்​வுட் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை​யும், யாஷ் தயாள் 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். புவனேஷ்வர் குமார், ரோமாரியோ ஷெப்​பர்டு ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

102 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆர்​சிபி 10 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 106 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. பில் சால்ட் 27 பந்​துகளில், 6 பவுண்​டரி​கள், 3 சிக்​ஸர்​களு​டன் 56 ரன்​கள் விளாசி​னார். ரஜத் பட்​டி​தார் 8 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 15 ரன்​களும் சேர்த்​தார்.

முன்​ன​தாக விராட் கோலி 12 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 12 ரன்​கள் எடுத்த நிலை​யில் கைல் ஜேமிசன் பந்​தி​லும், மயங்க் அகர்​வால் 13 பந்​துகளில், 2 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 19 ரன்​கள் எடுத்த நிலை​யில் முஷிர் கான் பந்​தி​லும் ஆட்​ட​மிழந்​தனர்.

8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆர்​சிபி அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. அந்த அணி 2016-ம் ஆண்​டுக்​கு பின்​னர்​ தற்​போது​தான்​ இறு​திப்​ போட்​டி​யில்​ கால்​பதித்​துள்​ளது.



Read More

Previous Post

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

Next Post

ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மீதான வர்த்தக நீதிமன்ற தடை நிறுத்திவைப்பு | Trade Court s stay on Trump tariff collection temporarily halted

Next Post
ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மீதான வர்த்தக நீதிமன்ற தடை நிறுத்திவைப்பு | Trade Court s stay on Trump tariff collection temporarily halted

ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மீதான வர்த்தக நீதிமன்ற தடை நிறுத்திவைப்பு | Trade Court s stay on Trump tariff collection temporarily halted

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin