Last Updated:
ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் இலவச டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டுவதாக சன்ரைசர்ஸ் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
இலவச டிக்கெட்டுகள் கேட்டு ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தங்களை மிரட்டுவதாக சன்ரைசர்ஸ் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணியின் சொந்த மைதானமாக ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானம் உள்ளது. இங்கு நடக்கும் போட்டிகளைக் காண அணி நிர்வாகம் சார்பில் அம்மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு 3,900 இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இதில் 50 டிக்கெட்டுகள் உயர்தர அறைகளுக்கான டிக்கெட்டுகள் ஆகும்.
இந்த சூழலில் பாக்ஸில் 30 பேர் மட்டுமே அமர முடியும் என்பதால், கூடுதலாக 20 டிக்கெட்டுகளை வேறு பாக்ஸில் வழங்க வேண்டுமென ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்து நச்சரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடுப்பான சன்ரைசர்ஸ் அணியின் மேலாளர் ஸ்ரீநாத், கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”ஐதராபாத் மைதானத்தில் சன்ரைசர்ஸ் விளையாடுவது பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுங்கள், பிசிசிஐயிடம் சொல்லி வேறு மைதானத்திற்கு போட்டிகளை மாற்றிக் கொள்கிறோம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hyderabad,Telangana
March 31, 2025 3:17 PM IST


