Last Updated:
உத்தரபிரதேசத்தில் மாயா மவுரியா தனது கணவர் தர்மேந்திராவை மிரட்டிய சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தில் மீரட் படுகொலை சம்பவத்தைப் போன்று உன்னையும் வெட்டி ட்ரம்மில் அடைத்து விடுவேன் என கணவரை மிரட்டிய மனைவியின் சிசிடிவி காட்சிகளால் அம்மாநிலமே அதிரந்து போயுள்ளது.
கள்ளக்காதலை தட்டிக் கேட்டால் புருஷனாவது, புண்ணாக்காவது, வெட்டி கூறு போட்டு விட வேண்டியதுதான் என்ற ஆவேஷமடையும் பெண்களின் எண்ணிக்கை உத்தரபிரதேசத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பாவி கணவர்கள் உயிர் பயத்தில் காவல்நிலையத்தை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். அப்படி ஒரு மிரட்டல் சம்பவம் தான் உத்தரபிரதேசத்தில் தற்போது அரங்கேறியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சவுரவ் சுக்லா என்பவரை அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி தனது காதலன் ஷாகிலுடன் சேர்ந்து கொலை செய்து பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி ஆக்ரோஷ பெண் ஒருவர் கணவரை மிரட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி உத்தரபிரதேசத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள கோண்டா பகுதியை சேர்ந்தவர் என்ஜினீயர் தர்மேந்திர குஷ்வாஹா. இவர், கடந்த 2016ஆம் ஆண்டு மாயா மவுரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், என்ஜினீயர் தர்மேந்திரா தனது மனைவி பெயரில் நிலம் ஒன்றை வாங்கி வீடு கட்டுவதற்கான ஒப்பந்ததை மனைவியின் உறவினரான நீரஜ் மவுரியா என்பவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அடிக்கடி அங்கு சென்ற மாயா, நீரஜூடன் பேசி பழகியதில் இருவரும் நெருக்கமாகியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் நெருக்கமாக இருப்பதை தர்மேந்திரா பார்த்து அதிர்ந்து போனார்.
இதையும் படிங்க: “மகாராஷ்டிராவில் மராத்தி பேசாதவர்களை கன்னத்தில் அறையுங்கள்” – ராஜ் தாக்ரே பேச்சு
இதுகுறித்து மனைவியிடம் கேட்டபோது, அவரும் நீரஜூம் சேர்ந்த தர்மேந்திர குஷ்வாஹாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் மாயா வீட்டிலிருந்து நீரஜுடன் சென்றுவிட்டார். இதுதொடர்பாக தர்மேந்திரா போலீசாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் மாயா இருதினங்களுக்கு முன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த தர்மேந்திரா மற்றும் அவரது தாய் ஆகியோரை மாயாவும், நீரஜூம் சேர்ந்து கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது. மேலும் தர்மேந்திராவைப் பார்த்து, நீ அதிகமாக பேசினால், மீரட் படுகொலை போல உன்னையும் வெட்டி டிரம்மில் அடைத்துவிடுவேன் என மாயா ஆவேஷமாக மிரட்டி உள்ளார்.
அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தனது கணவர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், அவர் தன்னை நான்குமுறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் மாயா தனது தரப்பில் புகார் அளித்திருக்கிறார். இருதரப்பு புகார்களின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
March 31, 2025 8:33 PM IST
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. கணவனுக்கு ஒப்பான மிரட்டல் விடுத்த மனைவி.. பகீர் பின்னணி!


