• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஐடி துறையில் இருந்து ஒரு திரைப்பட தயாரிப்பாளர்..!! யார் இந்த Freshworks கிரிஷ் மாத்ருபூதம்? | From Freshworks Founder to Film Producer: Girish Mathrubootham Backs Pa Ranjith’s Sarpatta Parambarai 2

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஐடி துறையில் இருந்து ஒரு திரைப்பட தயாரிப்பாளர்..!! யார் இந்த Freshworks கிரிஷ் மாத்ருபூதம்? | From Freshworks Founder to Film Producer: Girish Mathrubootham Backs Pa Ranjith’s Sarpatta Parambarai 2
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐடி துறையில் இருந்து ஒரு திரைப்பட தயாரிப்பாளர்..!! யார் இந்த Freshworks கிரிஷ் மாத்ருபூதம்?

இந்திய டெக் உலகில் கிரிஷ் மாத்ருபூதத்தை தெரியாதவர் இருக்க முடியாது. தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர், பிரபல பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான Freshworks நிறுவனத்தின் நிறுவியர். இவர் தற்போது தமிழ் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்துள்ளார்.

திருச்சிராப்பள்ளியை சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை திருச்சி மற்றும் தஞ்சாவூரில் முடித்தவர். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். இதன் பின்னர் வெறும் 12,000 ரூபாய் மாத சம்பளத்தில் அம்பத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஐடி துறையில் ஆர்வம் பிறக்கவே அதன் அடிப்படைகளை கொண்டு ஐடி துறையில் கால் பதித்தார்.

ஐடி துறையில் இருந்து ஒரு திரைப்பட தயாரிப்பாளர்..!! யார் இந்த Freshworks கிரிஷ் மாத்ருபூதம்?

HCL, eForce, Zoho போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்தார். Zoho நிறுவனத்தில் 2001ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், பிராடெக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவில் துணை தலைவராக பதவி உயர்வு பெற்றார். அப்போது தான் கஸ்டமர் சப்போர்ட் சாஃப்ட்வேர்களுக்கான தேவை இருப்பதை அறிந்து நண்பர் ஷான் கிருஷ்ணசாமியுடன் இணைந்து Freshworks நிறுவனத்தை தொடங்கினார்.

6 பேரை கொண்டு சென்னையில் 2010ஆம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனமாக மாறியது. இந்நிறுவனம் 2021ஆம் ஆண்டு அமெரிக்க பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. தற்போது சுமார் 32,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக உள்ளது. தற்போது இவர் நிறுவன தலைமை அதிகாரியாக இல்லாமல் இணை நிறுவனராக மட்டும் செயல்படுகிறார். மாற்று துறை முதலீடுகளை ஆய்வு செய்து வருகிறார்.

கிரிஷ் மாத்ருபூதம் திரையுலகில் ஆர்வம் கொண்டவர். சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர். சிறுவயது முதலே சினிமா மீது தீவிர பற்று கொண்ட இவர், தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு மொழிப் படங்களைப் பார்ப்பதிலும், நண்பர்களுடன் சினிமா பற்றி விவாதிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தின் துணை தயாரிப்பாளராகவும் இவர் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சார்பட்டா பரம்பரை 2 படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இவர் களமிறங்கியுள்ளார்.

பல்வேறு தரவுகளின்படி, கிரிஷ் மாத்ருபூதத்தின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு தோராயமாக இந்திய மதிப்பில் சுமார் 5,800 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப துறையில் கோலோச்சிய ஒரு தமிழர், தற்போது தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான படைப்பான ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளது இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாக பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

From Freshworks Founder to Film Producer: Girish Mathrubootham Backs Pa Ranjith’s Sarpatta Parambarai 2

ஐடி துறையில் இருந்து ஒரு திரைப்பட தயாரிப்பாளர்..!! யார் இந்த Freshworks கிரிஷ் மாத்ருபூதம்? / Trichy-born Freshworks co-founder Girish Mathrubootham, who led the Chennai SaaS giant to a Nasdaq listing, is now producing Pa Ranjith’s Arya-starrer Sarpatta Parambarai 2, marking his high-profile entry into Tamil cinema.

Story first published: Tuesday, September 29, 2026, 13:29 [IST]

Other articles published on Sep 29, 2026

Read More

Previous Post

தாராபுரம் களநிலவரத்தால் கலங்கிய சத்தியபாமா? கையில் எடுத்த புது டெக்னிக்! வைரலாகும் பிரச்சாரம்! | Dharapuram TVK Candidate Sathyabama follows new technique

Next Post

சிறுவர் சட்டத்தின் கீழ் பாலியல் துஷ்பிரயோகம், தூண்டுதல் தொடர்பான பிரிவுகளை விரிவுபடுத்த அரசு பரிசீலித்து வருகிறது – Malaysiakini

Next Post

சிறுவர் சட்டத்தின் கீழ் பாலியல் துஷ்பிரயோகம், தூண்டுதல் தொடர்பான பிரிவுகளை விரிவுபடுத்த அரசு பரிசீலித்து வருகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin