• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஐசிசி தரவரிசை.. விராட் கோலியை முந்தி சாதித்த சுப்மன் கில்.. ரோகித் சர்மாவும் மாஸ் காட்டிட்டாரு! | ICC ODI Rankings: Shubman Gill Rises to World No. 2; Virat Kohli Slips to Third Spot, Rohit Sharma Retains 4th

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஐசிசி தரவரிசை.. விராட் கோலியை முந்தி சாதித்த சுப்மன் கில்.. ரோகித் சர்மாவும் மாஸ் காட்டிட்டாரு! | ICC ODI Rankings: Shubman Gill Rises to World No. 2; Virat Kohli Slips to Third Spot, Rohit Sharma Retains 4th
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Wednesday, June 24, 2026, 23:46 [IST]

மும்பை: ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அதேபோல் 2வது இடத்தில் இருந்த இந்திய சீனியர் வீரர் விராட் கோலி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 4வது இடத்தில் ரோகித் சர்மா தக்க வைத்து கொண்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் அசாத்திய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார். அதே நேரத்தில், ரன் மெஷின் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தங்களது முந்தைய இடங்களிலிருந்து சற்றே சரிவைச் சந்தித்துள்ளனர்.

ICC ODI Rankings

சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்களின் சிறப்பான மற்றும் சுமாரான செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த புதிய தரவரிசைப் பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் ‘பிரின்ஸ்’ என்று அழைக்கப்படும் ஷுப்மன் கில், கடந்த சில தொடர்களாக ஒருநாள் போட்டிகளில் காட்டி வரும் அசாத்திய ஃபார்ம் காரணமாக, ஐசிசி தரவரிசையில் உலக அளவில் 2-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

முதலிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியின் டேரல் மிட்சலுக்கு நெருக்கமான புள்ளிகளுடன் சுப்மன் கில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதால், விரைவில் அவர் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், இந்திய அணியின் மூத்த வீரரான விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு இந்த புதிய தரவரிசைப் பட்டியல் சற்று ஏமாற்றமாக அமைந்துள்ளது.

நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின் தங்கி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் ரோகித் சர்மா 4வது இடத்தில் தொடர்கிறார். 9வது இடத்தில் இருந்த கேஎல் ராகுல் 2 இடங்கள் பின் தங்கி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய துணைக் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அசாத்திய சதம் விளாசிய இஷான் கிஷன் 21 இடங்கள் முன்னேறி 43வது இடத்தை பிடித்துள்ளார். பவுலிங்கை பொறுத்தவரை இந்திய ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 7வது இடத்தில் தொடர்கிறார். அதேபோல் முகமது சிராஜ் 2 இடங்கள் பின் தங்கி 17வது இடத்தில் உள்ளார். அதேபோல் அர்ஷ்தீப் சிங் 16 இடங்கள் முன்னேறி 22வது இடத்தில் இருக்கிறார்.

English summary

ICC ODI Rankings: Shubman Gill Rises to World No. 2; Virat Kohli Slips to Third Spot, Rohit Sharma Retains 4th

Read More

Previous Post

Tamilmirror Online || “பரீட்சை அட்டவணையில் மாற்றமில்லை”

Next Post

சிரம்பானிலுள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கில் அதிரடி சோதனை; RM16,000 மதிப்புள்ள 127 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்! | Makkal Osai

Next Post
சிரம்பானிலுள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கில் அதிரடி சோதனை; RM16,000 மதிப்புள்ள 127 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்! | Makkal Osai

சிரம்பானிலுள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கில் அதிரடி சோதனை; RM16,000 மதிப்புள்ள 127 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin