• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஏதென்ஸின் சுற்றுலா மையப்பகுதியில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம்!

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஏதென்ஸின் சுற்றுலா மையப்பகுதியில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிரேக்க தலைநகர் ஏதென்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாக்கா பகுதியில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, மூன்று சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அக்ரோபொலிஸ் மலைக்கு அருகிலுள்ள சிறிய வீதியொன்றில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 7.30 மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

வெடிப்பைத் தொடர்ந்து கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணை



காணாமல் போனவர்களில் குறித்த கட்டடத்தின் மேல் மாடியில் வசித்து வந்த வயோதிப தம்பதியினரும், கீழ் தளத்தில் குறுகிய கால வாடகை குடியிருப்பில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் மூன்று அமெரிக்க சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏதென்ஸின் சுற்றுலா மையப்பகுதியில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம்! | Powerful Explosion In Athens Tourist Hub

கட்டட இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதைக் கண்டறிய, மோப்ப நாய்கள் மற்றும் வெப்பநிலை கண்டறியும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


மீட்புப் பணியாளர்கள் அகழ்வாராய்ச்சி இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.


ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், வெடிப்புக்கான காரணம் தொடர்பில் அதிகாரப்பூர்வ விசாரணைகள் தொடர்கின்றன.

இதனிடையே, அருகிலுள்ள மற்றொரு கட்டடத்தில் இருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் இடிபாடுகள் தாக்கியதில் சிறு காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பினால் அருகிலிருந்த கட்டடங்களும் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

கனமழையால் சாலையில் சாய்ந்த இராட்சத மரம்: 5 கிலோமீட்டர் தூரத்திற்கு NKVE விரைவுச்சாலையில் நிலைகுத்திய போக்குவரத்து!t | Makkal Osai

Next Post

‘2-Step Verification’ வசதியை உடனடியாக இயங்கச் செய்யுங்கள்: WhatsApp மோசடிகளிலிருந்து தப்பிக்கப் பொதுமக்களுக்கு MCMC எச்சரிக்கை! | Makkal Osai

Next Post
‘2-Step Verification’ வசதியை உடனடியாக இயங்கச் செய்யுங்கள்: WhatsApp மோசடிகளிலிருந்து தப்பிக்கப் பொதுமக்களுக்கு MCMC எச்சரிக்கை! | Makkal Osai

'2-Step Verification' வசதியை உடனடியாக இயங்கச் செய்யுங்கள்: WhatsApp மோசடிகளிலிருந்து தப்பிக்கப் பொதுமக்களுக்கு MCMC எச்சரிக்கை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin