Last Updated:
மணிப்பூரில் ஏகே 47 துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில், ஏகே 47 துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடிய, இக்கூட்டத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023 ஆம் ஆண்டு முதல் குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே கலவரம் நீடித்து வருகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அம்மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் பிரேன் சிங்கின் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து, அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அங்கு தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிப்பூரின் கங்போக்பி (Kangpokpi ) மாவட்டத்தில் உள்ள கம்நோம்பாய் (Gamnomphai) கிராமத்தில் 10 முதல் 15 இளைஞர்கள் ஏகே 47 துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடிய காணொலி வெளியானது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மணிப்பூர் காவல்துறை, 5 இளைஞர்களை கைது செய்தது. அம்மாநிலத்தில் 12 ஆவது முறையாக குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு வழக்கத்தை விட அதிகளவில் காணப்பட்டது.
February 14, 2025 11:58 AM IST