ஏஐ சொன்னதை நம்பி.. ஊழியர்களை வேலையை வீட்டு தூக்கிய Meta.. இடி போல் இறங்கிய வழக்கு!
எப்படி மக்கள் தங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் ஏஐ-யிடம் கேட்டு பதில்களை பெறுகிறார்களோ, இதேபோல் நிறுவனங்களும் ஏஐ பேச்சை கேட்டுக்கொண்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அப்படி தான் மெட்டா நிறுவனம் சமீபத்தில் செய்த பணிநீக்கம் டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ பல வேலைகளை முட்டாள்தனமாக செய்கிறது, அதை அதிகாரிகளும் சரியாக கவனிக்காமல் பணிகளை மேற்கொள்கிறார்கள் என்ற பிரச்சனை நீங்கள் பணியாற்றும் இடத்தில் கூட எதிர்கொண்டு இருக்கலாம். இதே தான் தற்போது மெட்டா நிறுவனத்திலும் ஏற்பட்டு உள்ளது.

மெட்டா நிறுவனத்தின் நிர்வாகம் மே மாதம் செய்த பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்ட 26 ஊழியர்கள் கலிபோர்னியாவின் மேற்கு மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் மெட்டா நிர்வாகம் ஊழியர்களின் பல்வேறு விடுமுறை விதிகளை மீறி, பாகுபாடு காட்டி இந்த பணிநீக்கத்தை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் முக்கியமாக கர்ப்பமாக இருக்கும் ஊழியர்கள், உடல் ஊனமுற்றோர்களுக்கான சலுகைகளை மீறி பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். மெட்டா நிறுவனம் நிர்வாக மேம்பாட்டுக்காக வைத்திருக்கும் internal artificial-intelligence systems செய்த தவறு தான் இந்த வழக்கிற்கு மைய காரணமாக அமைந்துள்ளது எனவும் இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மெட்டா நிறுவனம் இந்த மே மாத பணிநீக்கத்தை சில முக்கிய காரணிகளை அடிப்படையாக கொண்டு பணிநீக்கம் செய்துள்ளது. இதில் பர்மாமென்ஸ் ரேட்டிங், கேளிப்ரேஷன் ஸ்கோர், ப்ரொடெக்ட்விட்டி மற்றும் அவுட்புட் மெட்ரிக்ஸ், ஏஐ நேட்டிவ் ரேட்டிங்க்ஸ், ஏஐ டோக்கன் கன்சம்சஷன் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பணிநீக்கம் செய்துள்ளது.
ஆனால் இந்த ஏஐ சிஸ்டம் மருத்து காரணமாக, குடும்ப நிலை காரணமாக விடுமுறைக்கு சென்றவர்களை கணக்கில் கொள்ளாமல் பொதுவாக கணக்கிட்டு உள்ளது. உதாரணமாக நீண்ட விடுமுறையில் இருந்தவர்களுக்கு ப்ரொடெக்ட்விட்டி மற்றும் அவுட்புட் மெட்ரிக்ஸ், ஏஐ நேட்டிவ் ரேட்டிங்க்ஸ், ஏஐ டோக்கன் கன்சம்சஷன் போன்றவை குறைவாக தான் இருக்கும். மேலும் மாற்றுத்திறனாளிகளின் ப்ரொடெக்ட்விட்டி மற்றும் அவுட்புட் மெட்ரிக்ஸ் மற்ற ஊழியர்களை காட்டிலும் குறைவாகவே இருக்கும்.
இதை எதையும் கருத்தில்கொள்ளாமல் ஏஐ முடிவுகளை கூற, அதை உயர்மட்ட நிர்வாகிகள் முழுமையாக ஆய்வு செய்யாமல் கொள்கை அளவில் தோல்வி அடைந்து இந்த பணிநீக்கத்தை செய்துள்ளனர். இந்த செயல்பாடுகளுக்கு எதிராக தற்போது மெட்டா நிறுவனத்திற்கு எதிராக 26 பேர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

