• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எல்லாத்தையும் பார்த்தேன்.. எட்டி எட்டி பார்த்ததையும் பார்த்தேன்.. விஜய் லண்டன் பயணம் பிரேமலதா கலாய் | I saw everything on Vijay’s london Visit said Premalatha

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
எல்லாத்தையும் பார்த்தேன்.. எட்டி எட்டி பார்த்ததையும் பார்த்தேன்.. விஜய் லண்டன் பயணம் பிரேமலதா கலாய் | I saw everything on Vijay’s london Visit said Premalatha
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Pavithra Mani

Time
Updated: Tuesday, September 29, 2026, 9:55 [IST]

மதுராந்தகம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில், விஜய் லண்டன் எதற்கு சென்றார் என அனைவருக்கும் தெரியும். எல்லாரும் பார்த்ததை நானும் பார்த்தேன். எட்டி எட்டி பார்த்ததையும் பார்த்தேன் என பிரேமலதா கலாய்த்துள்ளார்.

மதுராந்தகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், நான் அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க வேண்டும் என்கிறார் விஜய். ஏன் இப்போது நீங்கள் முதலமைச்சராக தானே உள்ளீர்கள். இப்போதே விவசாயியாக மாறலாம். அதற்கு ஏன் அடுத்த ஜென்மம். இந்த ஜென்மத்திலேய நீங்கள் விவசாயிகளுக்கு நல்லது செய்யலாமே. அதை எல்லாம் செய்ய மறந்த முதலமைச்சர் பொய்யான வாக்குறுதிகளை சொல்கிறார்.

Vijay Premalatha

விவசாயிகள் பாவம்

ரீல்ஸ் போடுவதற்கும், போட்டோ சூட் நடத்துவதற்கும் இனி சினிமாவில் நடப்பது போல தான் நடிக்கிறார். உண்மையில் மக்கள் பிரச்சனை பற்றி அவர் பேசவில்லை. மேட்டூர் அணையை திறந்தார். கடைமடைக்கு தண்ணீர் சென்றதா. போய் சேரவே இல்லை. இன்றைக்கு குறுவை போய்விட்டது. சம்பாவம் போய்விட்டது. டெல்டாவில் மொத்த விவசாயமும் போய்விட்டது. விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறார்கள்.

நானும் பார்த்தேன்

தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு கடன் தான் இருக்கிறது. வேலை வாய்ப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு இல்லை. விஜய் லண்டன் போயிட்டார். அவர் எதற்கு போனார் என உங்களுக்கு தெரியும். இதில் வேற நம்ம பத்திரிகைக்காரங்க என்கிட்ட, எப்படி பார்க்கறீங்க.. எப்படி பார்க்கறீங்கனு என்கிட்ட கேள்வி கேட்கறாங்க. நீங்க எல்லாம் எப்படி பார்த்தீர்களோ அப்படித்தான் நானும் பார்த்தேன். நீங்க என்னவெல்லாம் பார்த்தீர்களோ அதை நானும் பார்த்தேன் என்று சொன்னேன். வேறு என்னத்தை நான் சொல்ல.

எட்டி எட்டி பார்த்ததை

நீங்க எல்லாம் என்ன பாத்தீர்களோ அதை நானும் பார்த்தேன். இது தானே உண்மை. பத்திரிகையாளர்கள் இதே கேள்வியை எல்லா இடத்திலும் கேட்கிறார்கள். எப்படி பார்ப்பேன் என்றால் கண்ணால் டிவியில் பார்ப்பேன். நீங்கள் எல்லாம் என்ன பார்த்தீர்களோ அதைத்தானே நானும் பார்க்க முடியும். எட்டி எட்டி பார்த்ததையும் பார்த்தேன். அதை நீங்கள் பார்த்ததையும் பார்த்தேன். எல்லாவற்றையும் நான் பார்த்தேன். இதைத்தவிர நாம் வேறு என்ன சொல்ல முடியும். இது மாதிரி ஒரு ஆட்சி நடக்கிறது.

மக்கள் இனியும் நம்பணுமா

மக்கள் இனியும் அதை நம்ப வேண்டுமா என நான் கேட்கிறேன். வாக்களித்த மக்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டுமா இல்லையா. தமிழகத்தின் பிரச்சனைகளை பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அதைப்பற்றி கருத்து சொல்வதில்லை. எப்ப பார் திமுகவையும், ஸ்டாலினையும் விமர்சிக்கிறார். ஸ்டாலின் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள் என்கிறார். இன்னும் என்ன ஸ்டாலின் என்ன அங்கிள். நீங்கள் முதலமைச்சராகியாச்சு. இன்னும் தேர்தலில் பேசுவதை போல பேச கூடாது”என்றார்.

English summary

DMDK Premalatha said, Vijay visited London. everyone knew the reason. I saw everything happened there.

Read More

Previous Post

ஈரானிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிய10 தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை

Next Post

H1B விசாவுக்கு பெரிய கும்பிடு: இந்திய ஐடி நிறுவனங்களின் முடிவால் டெக் ஊழியர்கள் அதிர்ச்சி..!! | H-1B Visa Shock: Top 6 Indian IT Firms Cut FY27 Applications by 92% Amid Trump’s New Rules

Next Post
H1B விசாவுக்கு பெரிய கும்பிடு: இந்திய ஐடி நிறுவனங்களின் முடிவால் டெக் ஊழியர்கள் அதிர்ச்சி..!! | H-1B Visa Shock: Top 6 Indian IT Firms Cut FY27 Applications by 92% Amid Trump’s New Rules

H1B விசாவுக்கு பெரிய கும்பிடு: இந்திய ஐடி நிறுவனங்களின் முடிவால் டெக் ஊழியர்கள் அதிர்ச்சி..!! | H-1B Visa Shock: Top 6 Indian IT Firms Cut FY27 Applications by 92% Amid Trump’s New Rules

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin