• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளார் இஸ்மாயில் சப்ரி – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
March 13, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளார் இஸ்மாயில் சப்ரி – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஊழல் மற்றும் பணமோசடி விசாரணையில் தொடர்ந்து உதவுவதாக முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகிறார்.

நாட்டின் ஒன்பதாவது பிரதமர் இன்று புத்ராஜெயாவில் உள்ள அதன் தலைமையகத்தில் எம்ஏசிசியிடம் பல மணிநேரம் சாட்சியம் அளித்தார், மேலும் பேரா எம்பி நாளைக் காலை அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஊழல் தடுப்பு அமைப்பின் வட்டாரம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது.

“நான் எம்ஏசிசி தலைமையகத்தில் எனது வாக்குமூலத்தை வழங்கவிருந்தேன், விசாரணை முடியும் வரை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பேன்,” என்று இஸ்மாயில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி முன்னதாகத் தனது நான்கு முன்னாள் மூத்த அதிகாரிகள்மீதான விசாரணையில் இஸ்மாயில் சந்தேக நபராக அழைக்கப்படுவதாகக் கூறியிருந்தார்.

நான்கு அதிகாரிகளின் வீடுகளிலும், “பாதுகாப்பான வீடுகள்” என்று நம்பப்படும் மூன்று வளாகங்களிலும் நடந்த சோதனைகளின்போது சுமார் 17  கோடி ரிங்கிட்  ரொக்கமும், கிட்டத்தட்ட 67 லட்சம் மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன.

பிப்ரவரி 19 அன்று எம்ஏசிசியால் விசாரிக்கப்பட்ட இஸ்மாயில், பிப்ரவரி 22 அன்று வீட்டில் மயங்கி விழுந்ததால், இரத்த அழுத்தப் பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் அவர் மார்ச் 5 ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை அளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் அவர் மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பித்த பிறகு இது ஒத்திவைக்கப்பட்டது.

மார்ச் 7 ஆம் தேதி அவர் மற்றொரு மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பித்த பிறகு, பின்னர் ஒரு சந்திப்பும் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை, எம்ஏசிசி அதிகாரிகள் இஸ்மாயிலுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரை நேர்காணல் செய்து, அவரது உடல்நிலை மற்றும் தொடர்ச்சியான மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் அளவுக்கு அது தீவிரமானதா என்பதைத் தீர்மானித்தனர்.

-fmt

Like this:

Like Loading…



Read More

Previous Post

நிஜத்தில் ஒரு ‘பார்க்கிங்’ பட கதை… விஞ்ஞானியை அடித்தே கொன்ற கொடூர இளைஞர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி!

Next Post

வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

Next Post
வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin