தற்போதைய போர்நிறுத்தக் காலத்தில் அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் திறக்கப்பட்டுள்ளது என ஈரான் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
லெபனானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான போர் நிறுத்தத்திற்கு இணங்க, X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் இதனை கூறியுள்ளார்.
இந்த பதிவில் கப்பல்கள் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாகச் செல்லலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வழித்தடத்தில், போர்நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களின் பயணமும் முழுமையாகத் திறக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்தன.
பிரென்ட் கச்சா எண்ணெய் சுமார் 8.5% சரிந்து ஒரு பீப்பாய் சுமார் $90.93 ஆகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் சுமார் 9.4% சரிந்து $85.82 ஆகவும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

