• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா.. ஜப்பானை பின்னுக்குத் தள்ளியதாக தகவல்!

GenevaTimes by GenevaTimes
May 25, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா.. ஜப்பானை பின்னுக்குத் தள்ளியதாக தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 25, 2025 1:30 PM IST

இந்தியா உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை பின்னுக்குத் தள்ளியுள்ளது. நிதி ஆயோக் தலைமை சுப்ரமணியம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். 3வது இடத்தை இரண்டரை ஆண்டுகளில் அடையலாம் எனவும் தெரிவித்தார்.

EconomyEconomy
Economy

சர்வதேச அளவில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4ஆவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இந்தியா பெற்றுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக்கின் 10ஆவது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தார். பொருளாதார ரீதியாக இந்தியா வளர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், “நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உலகிலேயே 4வது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தில் நாம் இருக்கிறோம். இப்போது நாம் 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கிறோம். இந்த தரவுகளை ஐஎம்எஃப் வழங்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி ஜப்பானை விட இந்தியா பெரிய பொருளாதாரம். நமக்கு முன் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் மட்டுமே உள்ளன. தற்போதைய திட்டங்களை நாம் பின்பற்றி செயல்படுத்தினால் 3வது இடத்தை இரண்டரை ஆண்டுகளில் பிடித்துவிடுவோம்” என்று தெரிவித்தார்.

மேலும், தற்போது இந்தியா டேக்ஆஃப் கட்டத்தில் இருப்பதால், வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். சேவை வழங்குவதில் உள்ள பல சிக்கல்களை இந்தியா சரி செய்துள்ளதாக தெரிவித்த சுப்ரமணியம், நாட்டில் கடுமையான வறுமையை 5 சதவீதத்திற்கு கீழ் இந்தியா குறைத்துள்ளதாக கூறினார்.

Follow @ WhatsApp : வாட்ஸ் அப் -ல் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

IPL 2025 : குஜராத்தை அதன் சொந்த மண்ணில் வென்றது சி.எஸ்.கே. – 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Next Post

Tamilmirror Online || சஜித் அணியில் மேலும் இருவர் இராஜினாமா

Next Post
Tamilmirror Online || சஜித் அணியில் மேலும் இருவர் இராஜினாமா

Tamilmirror Online || சஜித் அணியில் மேலும் இருவர் இராஜினாமா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin