தனது சொந்த முயற்சியின் மூலம் Generative AI தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டுள்ளார். இதற்காக, அவர் எந்த வகுப்புக்கும் செல்லவில்லை. பொது தளத்தில் கிடைக்கும் வீடியோ மூலமாகவும், சொந்தமாகப் புதிய புராஜெக்டுகளைச் செய்தும் ஆன்லைனில் மூலமே கற்றுக்கொண்டுள்ளார். ஜெயினம் ஏற்கனவே 2 காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளார். மேலும், TEDx மேடையில் உரையாற்றியதுடன், ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். இவரது யூடியூப் சேனல் 1.45 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

