இக்காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கான அனுமான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் பரீட்சை நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கான அனுமான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பரீட்சை வினாத்தாள்களுக்கு நிகரான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் மின்னணு அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துதலும் தடை செய்யப்படுகிறது.
மேலும், அவ்வாறான விளம்பரப் பொருட்களைத் தம்வசம் வைத்திருப்பதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையானது, ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

