• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உத்தரப் பிரதேசத்தை உலுக்கும் Gen Alpha மாணவர்கள்! திணறும் யோகி.. இது கரப்பான்பூச்சிகளின் காலம்! | Gen Alpha Students Rock Uttar Pradesh, Yogi Govt Struggles as ‘Cockroach Era’ Begins

GenevaTimes by GenevaTimes
August 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
உத்தரப் பிரதேசத்தை உலுக்கும் Gen Alpha மாணவர்கள்! திணறும் யோகி.. இது கரப்பான்பூச்சிகளின் காலம்! | Gen Alpha Students Rock Uttar Pradesh, Yogi Govt Struggles as ‘Cockroach Era’ Begins
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Halley Karthik

Time
Updated: Thursday, August 20, 2026, 17:34 [IST]

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சரியில்லை, போதிய ஆசிரியர்கள் இல்லை என்று மாணவர்கள் ரோட்டில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். தொடர் போராட்டம் காரணமாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு டென்ஷனாகியிருக்கிறது.

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் ஜனதா கட்சியின் சார்பில் GenZ மாணவர்கள் நடத்தியிருந்த போராட்டம், மத்திய அரசை உலுக்கி எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் Gen Alpha மாணவர்களின் போராட்டங்கள், ஆளும் கட்சிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வருகின்றன.

Students

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஜூலை.28 அன்று பதேபூரின் கிஷன் பூர் நகரில் உள்ள சர்வோதயா இன்டர் கல்லூரியை சேர்ந்த 6-12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சுமார் 1,000 மாணவர்கள் பதாகைகளை மற்றும் பி.ஆர்.அம்பேத்கரின் படத்தை ஏந்தி போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பாதுகாப்பான குடிநீர், பழுதடைந்த வகுப்பறைகளை சரி செய்ய வேண்டும், மேற்கூரையை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கடந்த 2 வாரங்களாக உத்தரப் பிரதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. லக்னோ மற்றும் உன்னாவோவில் சாலைகளை மறித்தும் ஹமிர்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

லக்கோனவில் மற்றும் உன்னோவோவில் உள்ள சர்வோதயா உண்டு உறைவிடப் பள்ளிகளில் நடந்த 3 போராட்டங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்றன. இதை தொடர்ந்து சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் மாநிலத்தின் அனைத்து 103 சர்வோதயா பள்ளிகளையும் ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டிருககிறது.

புதன்கிழமையன்று உன்னாவோவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயணன் சர்வோதயா வித்யாலயா மாணவர்கள் காலை 6.30 மணியளவில் மோகன் சந்திப்பை சென்றடைந்து, பதாகைகளை ஏந்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் பற்றாக்குறை, தரமற்ற உணவு, போதிய குடிநீர் வசதியின்மை, ஆசிரியர்களின் முறையற்ற நடத்தை மற்றும் தூய்மைப் பிரச்சனைகளை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த சம்பவம் நடந்த பிறகு மற்றொரு சர்வோதயா வித்யாலயாவை சேர்ந்த சுமார் 200 மாணவிகள் கனமழையிலும் லக்னோ-துபக்கா புறவழிச்சாயை மறித்து இதே கோரிக்கைகளை முன்வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

English summary

Students in Uttar Pradesh have taken to the streets to protest against the lack of basic amenities and an insufficient number of teachers in schools. The ongoing protests have caused anxiety for the Yogi Adityanath-led BJP government.

Read More

Previous Post

அடுத்த சில நாட்களுக்கு நாட்டில் கடும் வெப்பநிலையே  நிலவும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post

காற்றில் சுழன்று அசத்திய மாணவர்கள்… விழுப்புரத்தில் களைகட்டிய ஜிம்னாஸ்டிக், ஜூடோ போட்டி | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
காற்றில் சுழன்று அசத்திய மாணவர்கள்… விழுப்புரத்தில் களைகட்டிய ஜிம்னாஸ்டிக், ஜூடோ போட்டி | Sports News (விளையாட்டு செய்திகள்)

காற்றில் சுழன்று அசத்திய மாணவர்கள்... விழுப்புரத்தில் களைகட்டிய ஜிம்னாஸ்டிக், ஜூடோ போட்டி | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin