• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உங்களுக்கு 40 வயதுக்கு மேல்  ஆகிறதா? நீங்கள் விரைவில் பணிநீக்கம் செய்யப்படலாம்.. எச்சரிக்கும் சிஇஓ! 

GenevaTimes by GenevaTimes
April 24, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
உங்களுக்கு 40 வயதுக்கு மேல்  ஆகிறதா? நீங்கள் விரைவில் பணிநீக்கம் செய்யப்படலாம்.. எச்சரிக்கும் சிஇஓ! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


40 வயதுக்குட்பட்டவர்கள் ஏன் ஆபத்தில் உள்ளனர்?: இந்த வயதினரே அதிக நிதி அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். 40 வயதிற்குட்பட்ட பலர் வீட்டுக் கடன், இஎம்ஐ, குழந்தைகளுக்கான பள்ளி அல்லது கல்லூரி கட்டணம் மற்றும் வயதான பெற்றோருக்கான மருத்துவக் கட்டணங்கள் போன்ற அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளித்து வருகிறார்கள். அதே நேரத்தில், அவர்களிடம் பெரிய சேமிப்பு அல்லது போதுமான முதலீடுகள் இல்லாமல் இருக்கலாம் என பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு தேஷ் பாண்டே கூறியுள்ளார்.

40 வயதிற்குட்பட்ட பெரும்பாலான மக்கள் தங்கள் குடும்பங்களை ஆதரிப்பதற்கும், கடன்களை அடைப்பதற்கும், எதிர்கால செலவுகளுக்குத் தயாராகுவதற்கும் நடுவில் இருப்பதால், பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய மிக மோசமான காலங்களில் இதுவும் ஒன்று. இந்தக் காலகட்டத்தில் பணிநீக்கங்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேஷ்பாண்டே கூறுகிறார்.

நிறுவனங்கள் ஏன் நடுத்தர வயதுள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன?: கடந்த காலத்தில், அனுபவம் மிகவும் மதிப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் இப்போது, ​​நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டிய அழுத்தத்தில் உள்ளன. அதற்காக பெரும்பாலும் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றனர். 40 வயதுடைய அணுபவ ஊழியர்கள் பொதுவாக இளைய ஊழியர்களை விட அதிக சம்பளம் பெறுவதால், நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும்போது பெரும்பாலும் முதலில் நீக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.

அதே நேரத்தில், இள வயது ஊழியர்கள் மிகவும் தகவமைப்புத் திறன் கொண்டவர்களாகவும், பணியமர்த்துவதற்கு மலிவானவர்களாகவும், புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிப்பதற்கு எளிதானவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள்.

40-களில் பணிநீக்கங்களை தவிர்ப்பது எப்படி?: 40 வயதுடைய ஊழியர்கள் அலுவலகத்தில் பொருத்தமானவர்களாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவும் மூன்று டிப்ஸ்களை தேஷ்பாண்டே பகிர்ந்து கொண்டார்:

1) செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்:

செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது இனி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மட்டுமானதல்ல. மார்க்கெட்டிங் மேலாளர்கள் முதல் மனிதவள வல்லுநர்கள் வரை அனைவரும் ஏஐ மூலம் எவ்வாறு தங்கள் வேலையை மேம்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சமீபத்திய செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பற்றி தொடர்ந்து அறிந்திருப்பவர்கள் தங்கள் வேலையைத் தக்கவைத்துக்கொள்வார்கள் அல்லது விரைவாக புதிய வேலைகளைக் கண்டுபிடிப்பார்கள்.

2) சேமிப்பு:

தேவையற்ற செலவுகளைக் குறைத்து பணத்தைச் சேமிப்பதில் கவனம் செலுத்துமாறு தேஷ்பாண்டே பரிந்துரைக்கிறார். திடீரென்று வேலை இல்லாமல் போனால், நல்ல நிதி சேமிப்பு இருப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

3) தொழில்முனைவோர் மனநிலையை உருவாக்குங்கள்:

40 வயதுடைய தொழில் வல்லுநர்கள் தாங்களாகவே எவ்வாறு மதிப்பை உருவாக்க முடியும் என்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும். அதற்காக இப்போதே புதிய தொழிலை சொந்தமாக தொடங்குங்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் இது முழுநேர வருமான ஆதாரங்களாக வளரக்கூடிய ஃப்ரீலான்சிங், ஆலோசனை அல்லது பகுதி நேர திட்டங்கள் உருவாக்குவதை உள்ளடக்கியதாக கூட இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 24, 2025 11:10 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

உங்களுக்கு 40 வயதுக்கு மேல்  ஆகிறதா? நீங்கள் விரைவில் பணிநீக்கம் செய்யப்படலாம்.. எச்சரிக்கும் சிஇஓ! 

Read More

Previous Post

டெல்லிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்ததால் தோல்வி: லக்னோ கேப்டன் பந்த் | Lucknow captain Pant says they lost match against dc after scoring 20 runs less

Next Post

சுகாதார அமைச்சின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் இலவசமாகதான் பாடினேன்: சித்தி நூர்ஹலிசா | Makkal Osai

Next Post
சுகாதார அமைச்சின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் இலவசமாகதான் பாடினேன்: சித்தி நூர்ஹலிசா | Makkal Osai

சுகாதார அமைச்சின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் இலவசமாகதான் பாடினேன்: சித்தி நூர்ஹலிசா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin