உக்ரைன் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை உக்ரைனின் இரண்டாவது முக்கிய பாலத்தின் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி இருந்தது.
இந்தத் தாக்குதலில், ‘வடக்கு பாலம்’ மீதான வீதிப் பகுதியும், அங்குள்ள மின்சாரப் பேருந்துகளுக்கான மேல்நிலை மின் கம்பிகளும் சேதமடைந்ததனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இந்த நிலையில் மேலும், போக்குவரத்திற்கு முக்கியமான டினிப்ரோ ஆற்றில் உள்ள வடக்கு சாலை பாலம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஏற்கனவே பல சாலைகளை முழுமையாக அல்லது பகுதி நேரமாக ரஷியா மூடியுள்ளது.
இந்த சாலை வழியாக உக்ரைன் ராணுவத்திற்கு தேவையான உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. தற்போதைய இந்த தாக்குதல் காரணமாக மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

