• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈஸ்டர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா கடும் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு | Russia for violating Easter ceasefire with 387 shellings: Zelensky

GenevaTimes by GenevaTimes
April 20, 2025
in உலகம்
Reading Time: 6 mins read
0
ஈஸ்டர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா கடும் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு | Russia for violating Easter ceasefire with 387 shellings: Zelensky
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கீவ்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 387 குண்டு வீச்சுத் தாக்குதல்களையும், 19 தரைவழித் தாக்குதல்களையும் நடத்தி உள்ளது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், “முதன்மைத் தளபதி சிர்ஸ்கியின் காலை 6 மணி அறிக்கையின்படி, பல்வேறு முன்னணி திசைகளில் இருந்த ஏற்கனவே ரஷ்யாவின் 59 குண்டுவீச்சுத் தாக்குதல்களும், அந்நாட்டுப் படை பிரிவுகளின் 5 தாக்குதல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்டாரோபில்ஸ்க் செயல்பாட்டுக் குழுவும் ஒரு தாக்குதலை பதிவு செய்துள்ளது. டொனேட்ஸ்க் ஒடிஜி பிரிவில் மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளன. எதிரிகள் ஏராளமான எஃப்பிவி ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

குர்ஸ்கி பிராந்தியத்தில், ரஷ்யப் படைகள் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது, தாக்குதலுக்கு ட்ரோன்களையும் பயன்படுத்தியுள்ளது. அனைத்து பகுதிகளிலும் போர்ச் சூழலக்கு ஏற்ப உக்ரைன் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். உக்ரைன் தொடர்ந்து நடுநிலையாக நடந்து கொள்ளும். நேற்று மாலை 6 மணி முதல் இன்று நள்ளிரவு வரை ரஷ்யா 387 குண்டுவீச்சு தாக்குதல்களையும், 19 தரைவழித்தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. ரஷ்யப் படைகளால் 290 முறை ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன

ஒட்டுமொத்தமாக ஈஸ்டர் நாளின் காலை நிலவரப்படி, போர்நிறுத்தம் என்ற ஒரு பொதுவான தோற்றத்தை ஏற்படுத்த ரஷ்யா முயற்சித்தாலும், இன்னும் உக்ரைனின் சில பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தும், தனிமைப்படுத்தும் தாக்குதல் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு ரஷ்யா முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும். இன்று நள்ளிரவில் இருந்து 30 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டித்து அமல்படுத்த வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. களத்தில் உள்ள சூழலுக்கு ஏற்ப உக்ரைன் செயல்படும்.” என்று தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

சிபில் ஸ்கோர சர்ருனு ஏத்தனுமா..? இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க..

Next Post

கற்பழிப்பு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு ஒரு தார்மீக நெருக்கடியை பிரதிபலிக்கிறது – Malaysiakini

Next Post
கற்பழிப்பு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு ஒரு தார்மீக நெருக்கடியை பிரதிபலிக்கிறது – Malaysiakini

கற்பழிப்பு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு ஒரு தார்மீக நெருக்கடியை பிரதிபலிக்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin