சைவ சமய மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மங்கள காரியங்கள், ஆலய வழிபாட்டு முறைகள் உள்ளிட்ட பாரம்பரிய நடைமுறைகள் முறையாகப் பேணப்பட வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
திருமணம், இறப்பு உள்ளிட்ட சடங்குகளில் இடம்பெறும் தேவையற்ற மாற்றங்கள் மற்றும் பாரம்பரியத்திற்கு முரணான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என இந்து குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! ‘ |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening

