அமெரிக்க-இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் போரை ஒரு “தவறு” என பிரிட்டன் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் வர்ணித்துள்ளார். மேலும், இப்போர் உலகைப் பாதுகாப்பான இடமாக மாற்றியுள்ளது என்பதில் தனக்கு “உடன்பாடில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
வோஷிங்டனில் உள்ள அமெரிக்க செய்தித் தொலைக்காட்சியான CNBC நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது ரீவ்ஸ் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“கேள்வி என்னவென்றால், நீங்கள் ஈரானிய ஆட்சியை விரும்புகிறீர்களா அல்லது வெறுக்கிறீர்களா என்பதல்ல – நான் ஈரானிய ஆட்சியை வன்மையாக வெறுக்கிறேன் – மாறாக, நீங்கள் அடைய விரும்பும் மாற்றத்தை எவ்வாறு அடைவது என்பதே ஆகும்,” என்று அவர் கூறுகிறார்.
இன்று பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதில் உடன்பாடில்லை
“ஒரு ராஜதந்திர வழிமுறை திறந்திருந்தது, உரையாடல்கள், முறையான கலந்துரையாடல்கள் நடந்துகொண்டிருந்தன.”
“அந்த கலந்துரையாடல்களை இடையில் முடித்துவிட்டு, மோதலில் இறங்கியது ஒரு ‘தவறு’.

image credit -reuters
ஏனெனில் ‘சில வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட இன்று நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை’,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
