ஹார்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே வான்வழி மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று அதிகாலையில் ஓமன் நாட்டின் புஷெர் மாகாணத்தின் வான்பரப்பில் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவலர் படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வீடியோவிலும் சமூக ஊடகங்களில் பரவி இருக்கிறது. இத்தாக்குதல்களால் இரு நாடுகளிடையே மீண்டும் பெரிய அளவில் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. ஏற்கனவே இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் ஈரான் மீது பதிலுக்குத் தாக்கியது.
இஸ்ரேலிடம் தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவே ஈரான் மீது பதிலடித் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் நடந்து வந்த பேச்சுவார்த்தையின் முடிவு கேள்விக்குறியாகி இருக்கிறது.
அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அளித்த பேட்டியில், ”தெஹ்ரானின் உறுதியைச் சோதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஈரானிய ஆயுதப்படைகள் எந்தத் தாக்குதலையோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ பதில் அளிக்காமல் விடாது.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால் எங்கள் பகுதியை விட்டு வெளியேறுங்கள்,” என்று அவர் மேலும் கூறினார். அதேசமயம் அமெரிக்கா தனது சுயபாதுகாப்பு தாக்குதலை முடித்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

