Last Updated:
பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், வாகனங்களில் மைலேஜ் குறைவதாகவும், பழுதடைவதாகவும் புகார்கள் எழுந்தன.
எத்தனால் விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மனுத் தாக்கல் செய்த நிலையில், மெட்டா, எக்ஸ் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர, மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், வாகனங்களில் மைலேஜ் குறைவதாகவும், பழுதடைவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். குறிப்பாக, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி குறித்து விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி தாக்கல் செய்துள்ள மனுவில், தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தைப் பற்றியும் தவறான விமர்சனங்கள், மெட்டா, எக்ஸ், கூகுள் ஆகிய சமூக வலைதளங்களில் உள்ளதாகவும், அவற்றை நீக்கும் வகையில் அந்த நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர அனுமதி வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
Mumbai,Maharashtra
‘இ20 பெட்ரோல் விவகாரத்தில் அவதூறு’ – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மும்பை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல்


