• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இஸ்லாமிய தீவிரவாதத்தால் மூளைச்சலவை!” நடுவானில் பைலட் கத்திக்குத்து.. இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு தகவல் | Flydubai Flight Attack: Netanyahu Says Omani Co-Pilot Was Radicalised, Iran Link Under Probe

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“இஸ்லாமிய தீவிரவாதத்தால் மூளைச்சலவை!” நடுவானில் பைலட் கத்திக்குத்து.. இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு தகவல் | Flydubai Flight Attack: Netanyahu Says Omani Co-Pilot Was Radicalised, Iran Link Under Probe
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Published: Thursday, October 1, 2026, 19:04 [IST]

டெல் அவிவ்: ஃப்ளைதுபாய் விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானியே பைலட்டை தாக்கியுள்ளார். இதற்கிடையே அந்த ஓமன் துணை விமானி, இஸ்லாமிய தீவிரவாத சிந்தனைகளால் தீவிரமாக மூளைச்சலவை செய்யப்பட்டவர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரபரப்பு தெரிவித்துள்ளார். அதேநேரம் தாக்குதலுக்கான இறுதி காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல் அவிவ் நோக்கி பயணித்த ஃப்ளைதுபாய் விமானத்தில் கத்திக்குத்து தொடங்கி விமானத்தையே விபத்திற்குள்ளாகும் சதி வரை பல பகீர் சம்பவங்கள் நடந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்திய கேப்டன் மற்றும் பயணிகள் துரிதமாக செயல்பட்டதில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இது தொடர்பாக சில பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.

Flydubai Flight Attack

இஸ்லாமிய தீவிரவாதம்

அதாவது விமானத்தை விபத்தில் சிக்க வைத்து சதி செய்ய முயன்ற ஓமன் விமானி, இஸ்லாமிய தீவிரவாத சிந்தனைகளால் தீவிரமாக மூளைச்சலவை செய்யப்பட்டவர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரபரப்பு தெரிவித்துள்ளார். மேலும், பயணிகள் காக்பிட்டில் நுழைந்தபோது, துணை விமானி தனது இருக்கையில் அமர்ந்திருக்கவில்லை என்றும் அவர் காக்பிட்டின் நடுப்பகுதியில் நின்றுகொண்டு, விமானத்தின் முக்கிய கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்திலும் இந்திய விமானி செய்த செயல்.. துபாய் - இஸ்ரேல் விமானத்தில் 180 பேர் தப்பியது எப்படி?

கத்திக்குத்திலும் இந்திய விமானி செய்த செயல்.. துபாய் – இஸ்ரேல் விமானத்தில் 180 பேர் தப்பியது எப்படி?

என்னை கொன்றுவிடுங்கள்

அப்போது விமானத்தில் இருந்த இஸ்ரேல் பயணி ஒருவர் துணை விமானியை இழுத்து வெளியே தள்ளியுள்ளார். பின்னர் மற்ற பயணிகளும் இணைந்து அவரை கட்டுப்படுத்தினர். ஹெட்போன் கம்பியால் அவரது கைகள் கட்டப்பட்டதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். துணை விமானியை அசைய முடியாமல் பயணிகள் இதுபோல கட்டி வைத்திருந்தனர். அப்போது அவர் விமான ஊழியர்களை நோக்கி “என்னை கொன்றுவிடுங்கள்” என்று கூறியதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நெதன்யாகு மேலும் கூறுகையில், “விமானத்தில் நடந்தது மோசமான சம்பவம். விமானம் ஒரு கட்டத்தில் சில நொடிகளில் பல ஆயிரம் அடி சரிந்தது. அது பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. சிலர் விமானம் நிச்சயம் விபத்துக்குள்ளாகிவிடும் என நினைத்து பிரார்த்தனை செய்ய தொடங்கினர். விமானம் கீழ்நோக்கி பாய்ந்தபோது உள்ளே இருந்த பயணிகள் தூக்கி எறியப்பட்டனர். நல்வாய்ப்பாக விபத்து எதுவும் ஏற்படவில்லை.

இந்தியர் தான் ஹீரோ

இந்த சம்பவத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சார், இஸ்ரேல் பயணி மற்றும் அவர்களுக்கு உதவிய மற்ற பயணிகள்தான் 174 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.. துணை விமானியின் தாக்குதலில் கேப்டன் மச்சார் படுகாயமடைந்த நிலையில் இருந்தபோதும், பயணிகள் தலையிட்டு தாக்குதலை முறியடித்தனர். விமானம் பெரும் ஆபத்தில் இருந்த நேரத்தில் அவர்கள் ஹீரோ போல காப்பாற்றியுள்ளனர்” என்றார்.

பிளம்பர் டூ பல் மருத்துவர் வரை.. பிளை துபாய் விமானத்தில் இந்திய விமானிக்கு உதவிய 4 சக பயணிகள்!

பிளம்பர் டூ பல் மருத்துவர் வரை.. பிளை துபாய் விமானத்தில் இந்திய விமானிக்கு உதவிய 4 சக பயணிகள்!

நெதன்யாகு

மேலும், இந்த தாக்குதலில் ஈரானுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருவதாக நெதன்யாகு கூறியுள்ளார். இருப்பினும், ஈரான் உடனான தொடர்பு குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை என்றும் விசாரணை ஆரம்பக்கட்டத்திலேயே இருப்பதாகவும் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார். இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா, துணை விமானி தனியாக செயல்பட்டாரா, அவருக்கு பின்னால் வேறு யாரேனும் இருந்தார்களா என்பதற்கான பதில்கள் அடுத்தகட்ட விசாரணையில்தான் தெரியவரும்.

இருப்பினும், சுமார் 17,000 அடி உயரத்தில் நடந்த இந்த திக்திக் சம்பவம் ஒட்டுமொத்த உலக நாடுகள் இடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary

Israel Prime Minister Benjamin Netanyahu has said the Omani co-pilot involved in the Flydubai flight incident was radicalized(இஸ்லாமிய தீவிரவாதம் துபாய் விமான தாக்குதல்): Islamist extremist ideology Flydubai Flight Attack latest news in tamil.

Read More

Previous Post

விஷ ஊசி செலுத்தியும் தப்பிய பெண் மரணதண்டனைகைதி கவலைக்கிடமான நிலையில்

Next Post

டிரம்ப் சொன்ன ஒருவார்த்தை.. கூகுள், மைக்ரோசாப்ட் முதல் டிசிஎஸ், இன்போசிஸ் வரை பதற்றம்! | Donald Trump want AI to be called ‘Super Intelligence’ Triggers Global Tech Panic & Rush for .si Domains

Next Post
டிரம்ப் சொன்ன ஒருவார்த்தை.. கூகுள், மைக்ரோசாப்ட் முதல் டிசிஎஸ், இன்போசிஸ் வரை பதற்றம்! | Donald Trump want AI to be called ‘Super Intelligence’ Triggers Global Tech Panic & Rush for .si Domains

டிரம்ப் சொன்ன ஒருவார்த்தை.. கூகுள், மைக்ரோசாப்ட் முதல் டிசிஎஸ், இன்போசிஸ் வரை பதற்றம்! | Donald Trump want AI to be called ‘Super Intelligence’ Triggers Global Tech Panic & Rush for .si Domains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin