• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை! கிங் மேக்கராகும் அரபு கட்சிகள்! நெதன்யாகுக்கு தலைவலி | Israel elections: No one secures majority Arab parties emerge as kingmakers headache for Netanyahu

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை! கிங் மேக்கராகும் அரபு கட்சிகள்! நெதன்யாகுக்கு தலைவலி | Israel elections: No one secures majority Arab parties emerge as kingmakers headache for Netanyahu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Mani Singh S

Time
Published: Friday, October 30, 2026, 1:21 [IST]

ஜெருசலேம்: இஸ்ரேல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 100 சதவீதம் முடிந்துள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 19 இடங்களை வென்றுள்ள அரபுக்கட்சிகள் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளன. பெஞ்சமின் நெதன்யாகு கட்சியின் கூட்டணி 53 இடங்களை வென்றுள்ள போதிலும் அவரால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 100 சதவீம் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 61 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். வாக்கு எண்ணிக்கை முடிவில் இஸ்ரேலின் தற்போதைய பிரதமராக இருக்கக் கூடிய பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Israel elections No one secures majority Arab parties emerge as kingmakers headache for Netanyahu

கிங் மேக்கராக அரபுக்கட்சிகள்

காடி ஐசென்கோட் தலைமயிலான கூட்டணி 48 இடங்களில் வென்றுள்ளது. அரபுக்கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அரபுக்கட்சிகள் கிங் மேக்கராக மாறியுள்ளன.

நெதன்யாகுவின் முக்கிய அரசியல் போட்டியாளராக உள்ள காடி ஐசென்காட், சில நிபந்தனைகளுடன் அரபுக் கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அரபுக் கட்சிகள் தலைமையிலான ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணியின் இரண்டாவது இடத்தில் உள்ள அகமது திபி, நாடாளுமன்ற சபாநாயகரை மாற்றுவது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிக் கூட்டணி தன்னைத் தொடர்புகொண்டதாக தெரிவித்துள்ளார்.

நெதன்யாகுவுக்கு தலைவலி

மேலும், எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளருக்கு தங்களது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார். இதனால், அரபுக்கட்சிகளுடன் இணைந்து காடி ஐசென் காட் ஆட்சி அமைக்க தயாராகிறதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஒருவேளை இது நடந்தால் இஸ்ரேலின் தற்போதைய பிரதமராக இருக்கக் கூடிய பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பெரிய தலைவலியாக மாறும்.

பெரும்பான்மையை எட்ட முடியாமல் தவிக்கும் நெதன்யாகு.. தேர்தல் திருடப்பட்டு விட்டதாக பரபர குற்றச்சாட்டு

பெரும்பான்மையை எட்ட முடியாமல் தவிக்கும் நெதன்யாகு.. தேர்தல் திருடப்பட்டு விட்டதாக பரபர குற்றச்சாட்டு

நெதன்யாகு தனது பதவியை இழந்தால், அவருக்கு எதிராக பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படலாம். அதாவது, நெதன்யாகுவிற்கு எதிராக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தொடங்கப்படலாம். மேலும், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலைத் தடுக்கத் தவறியது தொடர்பான பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து முறையான விசாரணை தொடங்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

உற்று கவனிக்கும் உலக நாடுகள்

புதிய அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அதுவரை பெஞ்சமின் நெதன்யாகுவே காபந்து அரசை கவனிப்பார். அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும். அதன்பிறகே புதிய அரசு அமைக்க அந்த நாட்டின் அதிபர் அழைப்பு விடுப்பார்.

ஜெயிலுக்கு போகும் நெதன்யாகு.. இஸ்ரேல் தேர்தலில் நடக்கப்போகும் பெரிய டிவிஸ்ட்!

ஜெயிலுக்கு போகும் நெதன்யாகு.. இஸ்ரேல் தேர்தலில் நடக்கப்போகும் பெரிய டிவிஸ்ட்!

நெதன்யாகுவின் லிகுட் கட்சி 27 இடங்களைக் கைப்பற்றி, இஸ்ரேல் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருந்தாலும், அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான பெரும்பான்மை ஆதரவு அவருக்குக் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. 4 ஆம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் இருக்கும் என்பதால், மொத்த நாடுகளும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

English summary

Israel: With the counting of votes in the Israeli election now 100 percent complete, no single party has secured a majority. Consequently, the Arab parties—having won 19 seats—have emerged as ‘kingmakers.’ Although the coalition led by Benjamin Netanyahu’s party has won 53 seats, a major question remains: will he be able to form a government?

Read More

Previous Post

பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து: 10 பேர் பலி

Next Post

ஆன்லைனில் டிரஸ் வாங்குறோம், யூஸ் பண்றோம், ரிட்டன் போடுறோம்! சிறு வியாபாரிகளை திணறடிக்கும் “Return” கலாச்சாரம்! | Wear It for Diwali, Return It Later? The Growing Problem for Online Sellers

Next Post
ஆன்லைனில் டிரஸ் வாங்குறோம், யூஸ் பண்றோம், ரிட்டன் போடுறோம்! சிறு வியாபாரிகளை திணறடிக்கும் “Return” கலாச்சாரம்! | Wear It for Diwali, Return It Later? The Growing Problem for Online Sellers

ஆன்லைனில் டிரஸ் வாங்குறோம், யூஸ் பண்றோம், ரிட்டன் போடுறோம்! சிறு வியாபாரிகளை திணறடிக்கும் "Return" கலாச்சாரம்! | Wear It for Diwali, Return It Later? The Growing Problem for Online Sellers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin