• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆன்லைனில் டிரஸ் வாங்குறோம், யூஸ் பண்றோம், ரிட்டன் போடுறோம்! சிறு வியாபாரிகளை திணறடிக்கும் “Return” கலாச்சாரம்! | Wear It for Diwali, Return It Later? The Growing Problem for Online Sellers

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆன்லைனில் டிரஸ் வாங்குறோம், யூஸ் பண்றோம், ரிட்டன் போடுறோம்! சிறு வியாபாரிகளை திணறடிக்கும் “Return” கலாச்சாரம்! | Wear It for Diwali, Return It Later? The Growing Problem for Online Sellers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆன்லைனில் டிரஸ் வாங்குறோம், யூஸ் பண்றோம், ரிட்டன் போடுறோம்! சிறு வியாபாரிகளை திணறடிக்கும் “Return” கலாச்சாரம்!

சமீபகாலமாக மக்கள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்கின்றனர். ஆனால் அதே ஆன்லைன் ஷாப்பிங் துறை.. ஜவுளி வியாபாரம் செய்யும் சிறு வணிகர்களுக்கு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. பண்டிகைக் காலங்களில் ஆடைகளை ஆர்டர் போட்டு.. ஒரு முறை பயன்படுத்திவிட்டு மீண்டும் ரிட்டன் போடும் வழக்கம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால் சிறு வணிகர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

ரிஷப் ஜெயின் என்ற விற்பனையாளர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். ஆன்லைன் மூலமாகவும் ஆடைகளை விற்பனை செய்து வந்தார். பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் ஆன்லைனில் கடந்த 7 ஆண்டுகளாக விற்பனை செய்தார். ஆனால் கடந்த ஆண்டு ஆன்லைன் ஆர்டர்களால் அவருக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன தெரியுமா?

ஆன்லைனில் டிரஸ் வாங்குறோம், யூஸ் பண்றோம், ரிட்டன் போடுறோம்! சிறு வியாபாரிகளை திணறடிக்கும்

வாடிக்கையாளர்கள் பலர் துணிகளை வாங்கி ஒரு முறை பயன்படுத்திவிட்டு அதை மீண்டும் ரிட்டன் போட்டுள்ளனர். மெகா ஃபேஷன் என்ற பெயரில் ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டு வந்த ரிஷப் ஜெயின், கடந்த வருடம் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான துணிகளை வாடிக்கையாளர்கள் ரிட்டன் போட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்.. சில நேரம் வாடிக்கையாளர்கள் 10 முதல் 12 துணிகளை ஆர்டர் செய்வார்கள்.

வாங்கி பயன்படுத்திவிட்டு அதை மீண்டும் ரிட்டன் போட்டு விடுவார்கள். என் கைக்கு அந்த துணிகள் வரும்போது அவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டது என்பது தெள்ளத்தெளிவாக தெரியும். சில ஆடைகளில் வியர்வை மற்றும் பெர்ஃப்யூம் வாசனையும் வரும். சிலவற்றில் டேக் எதுவும் இருக்காது. இன்னும் சிலர் டேக்-ஐ பிரிக்காமல் துணியை அணிந்து விட்டு மீண்டும் ரிட்டன் போட்டு விடுவார்கள்.

ஆன்லைன் மூலம் ஒரு துணியை வாங்கி ஒரே ஒரு விசேஷத்திற்கு பயன்படுத்திவிட்டு அதை மீண்டும் ரிட்டன் போடும் வழக்கத்தை வார்ட்ரோபிங் என்று கூறுகின்றனர். நவராத்திரி, தாண்டியா, தீபாவளி போன்ற பண்டிகை கொண்டாட்டங்களில் போது மக்கள் துணிகளை வாங்கி பயன்படுத்தி பிறகு ரீஃபண்ட் பெறுவதற்காக அதை ரிட்டன் போடுகின்றனர். சமீபத்தில் கூட ஒரு டெலிவரி ஊழியர் ஏராளமான ரிட்டன் பார்சல்களை பெற்றுக் கொண்டு செல்வது போல ஒரு வீடியோ வைரலானது.

அதுவும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இந்த பிரச்சினை இன்னும் சற்று அதிகமாகவே இருக்கிறது. இப்படி ரிட்டன் போடப்படும் உடைகளால் சிறு வியாபாரிகளுக்கு தங்களின் முதலீடு பாதிக்கப்படுவதோடு லாபமும் குறைந்து விடுகிறது. ஆன்லைன் மூலமாக வாங்கும் ஆடைகளில் அளவு சரியாக இல்லாமல் இருப்பது, படத்திலும் நிஜத்திலும் வித்தியாசமான ஆடைகளை பெறுவது அல்லது கிழிந்திருப்பது போன்ற காரணங்களுக்காக ரிட்டன் போடலாம்.. தவறில்லை.. ஆனால் தீபாவளி போன்ற பண்டிகைக்காக ஆர்டர் செய்து ஒரே ஒரு முறை பயன்படுத்திவிட்டு கரையுடன், டாக் இல்லாமல் ரிட்டன் போட்டால் அதை மீண்டும் விற்க முடியாத நிலைக்கு ஆளாகின்றனர்.

நஷ்டத்தோடு சேர்த்து ஷிப்பிங் கட்டணம், பேக்கிங் செலவு மற்றும் ஆன்லைன் தளங்களுக்கு வியாபாரிகள் செலுத்தும் கட்டணம் ஆகியவையும் அடங்கும், ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் விற்பனை செய்பவர்களுக்கு.. ரிட்டர்ன் போடப்படும் ஒவ்வொரு ஆர்டருக்கும் 100 முதல் 120 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சிறு வியாபாரிகள் ஆன்லைன் பிசினஸை விட்டு விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ஒரு வியாபாரி “நான் கடுமையான நஷ்டத்தில் இருக்கிறேன். தயவு செய்து ரிட்டன் போட்டு விடாதீர்கள்” என்று எழுதி பார்சல் போட்டிருந்தார். இது உண்மையிலேயே சிறு வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சனையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இதுபோன்ற பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டுவர ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் ரிட்டன் பாலிசியை கடுமையாக்க வேண்டும். போலியாக ரிட்டன் போடுவதிலிருந்து சிறு வியாபாரிகளை காக்க ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் வழிவகை செய்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனை குறையத் தொடங்கும். அப்போதுதான் ஆன்லைன் வர்த்தகம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல.. சிறு வியாபாரிகளுக்கும் லாபகரமானதாக அமையும்.

Share This Article

Story first published: Thursday, October 29, 2026, 20:46 [IST]

Other articles published on Oct 29, 2026

Read More

Previous Post

இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை! கிங் மேக்கராகும் அரபு கட்சிகள்! நெதன்யாகுக்கு தலைவலி | Israel elections: No one secures majority Arab parties emerge as kingmakers headache for Netanyahu

Next Post

தீவாளியா தீபாவளியா?

Next Post

தீவாளியா தீபாவளியா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin