Last Updated:
தவறான பாதைக்குச் செல்வது எளிது, ஆனால் அவர்களை மீண்டும் சரியான பாதைக்கு அழைத்து வருவதே நமது பொறுப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இளைஞர்கள் தவறாக வழிகாட்டப்படுவதாகக் கவலை தெரிவித்தார். “மாணவர்களைத் தூண்டிவிட வேண்டாம், அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டுங்கள்” என்று கூட்டணி எம்பிக்களிடம் கேட்டுக்கொண்டார்.
நீட் தேர்வில் (NEET-UG 2026) ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு காரணமாக, டெல்லியில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்னிட்டு நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர், இளைஞர்கள் தவறாக வழிகாட்டப்படுவதாகக் கவலை தெரிவித்தார். “மாணவர்களைத் தூண்டிவிட வேண்டாம், அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டுங்கள்” என்று கூட்டணி எம்பிக்களிடம் கேட்டுக்கொண்டார். தவறான பாதைக்குச் செல்வது எளிது, ஆனால் அவர்களை மீண்டும் சரியான பாதைக்கு அழைத்து வருவதே நமது பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு, நீட் தேர்வு கசிவு தொடர்பான தகவல்கள் வெளியான உடனேயே, அதற்குப் பொறுப்பானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார். மேலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள் நலனுக்காக நாடாளுமன்றம் சீராக இயங்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களின் பின்னணியில், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) பிரதிநிதிகள் மற்றும் கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆகியோரின் தரப்பில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் வினாத்தாள் கசிவு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது,
மே 3 அன்று நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 அன்று மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களுக்குச் சரியான வழியைக் காட்டுவது நமது பொறுப்பு – NDA கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்..


