• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இளம் வீரர்களை உருவாக்கும் பாரம்பரியத்தை தொடர விருப்பம்

GenevaTimes by GenevaTimes
November 26, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இளம் வீரர்களை உருவாக்கும் பாரம்பரியத்தை தொடர விருப்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘இந்திய கிரிக்கெட் அணிக்காக இளம் வீரர்களை உருவாக்கும் பாரம்பரியத்தை தொடர விரும்புகிறோம்’ என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி தெரிவித்துள்ளார்.

இரண்டு தினங்களாக ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பல இளம் வீரர்களை வாங்கியது. இதுதொடர்பாக பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி, “மெகா ஏலம் என்றால் புதிய அணி, புதிய தொடக்கம். ஆனால் அதுவே மும்பை இந்தியன்ஸ்க்கு உற்சாகம்.

டிரென்ட் போல்ட், நமன் திர், அல்லா கசன்ஃபர், ரியான் ரிக்கல்டன், தீபக் சாஹர், ராபின் மின்ஸ், கரண் சர்மா, வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, அஸ்வினி குமார், ராஜ் அங்கத் பாவா, ஸ்ரீஜித் கிருஷ்ணன், சத்தியநாராயண ராஜு, ஜான் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாட் வில்லியம்ஸ், விக்னேஷ் புதூர் என சில புதிய முகங்களையும், அதேநேரம் சில பழைய வீரர்களையும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

விளம்பரம்

Also Read | Vijay | ரூ.300 கோடி வசூல்… 12 வருஷம் 2 மாதம் கழித்து விஜய் கூப்பிட்டு வாழ்த்திய பிரபலம்!

ஹர்திக், ஜஸ்பிரித், ரோஹித், சூர்யா மற்றும் திலக் என வலுவான வீரர்களை ஏற்கனவே ரீடெயின் செய்துள்ளோம். இவர்களை சுற்றி எப்படி ஒரு அணியை கட்டமைப்பு என்பதே ஏலத்தில் எங்களுக்கு இருந்த வாய்ப்பு.

இந்திய அணிக்காக விளையாடும் பல திறமையான இளைஞர்களை வளர்த்தெடுப்பதில் நாங்கள் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறோம். ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ரமன்தீப் சிங் ஆகியோரை போல, இப்போது அணியில் இணைந்துள்ள நமன் திர், ராபின் மின்ஸ், அஸ்வினி குமார், ராஜ் அங்கத் பாவா மற்றும் ஸ்ரீஜித் கிருஷ்ணன் ஆகிய இளம் வீரர்களுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

விளம்பரம்

Mumbai Indians owner Mrs Nita Ambani says the franchise wants to continue the tradition of developing young players for Indian cricket

Credit: @mipaltan pic.twitter.com/WFR7aPr2oH

— News18 CricketNext (@cricketnext) November 26, 2024

விளம்பரம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்காக இளம் வீரர்களை உருவாக்கும் இந்த பாரம்பரியத்தை நாங்கள் தொடர விரும்புகிறோம்.

மும்பை பல்தான்ஸ்.. இது எங்கள் அணி, மும்பையின் அணி. உங்களின் ஆதரவுதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய பலம். ஒரு குடும்பமாக விளையாடி ஒன்றாக நாம் வெற்றிபெறுவோம்” என்று நெகிழ்ச்சியுடன் புதிய வீரர்களை அணிக்கு வரவேற்றுள்ளார்.

விளம்பரம்

.



Read More

Previous Post

வாக்குச் சீட்டு முறை கோரிய மனு தள்ளுபடி உச்சநீதிமன்றம்

Next Post

‘கீழ்ப்படிதல்’ குடும்ப வன்முறையைப் புகாரளிப்பதிலிருந்து மனைவிகளைத் தடுக்கிறது – Malaysiakini

Next Post
‘கீழ்ப்படிதல்’ குடும்ப வன்முறையைப் புகாரளிப்பதிலிருந்து மனைவிகளைத் தடுக்கிறது – Malaysiakini

‘கீழ்ப்படிதல்’ குடும்ப வன்முறையைப் புகாரளிப்பதிலிருந்து மனைவிகளைத் தடுக்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin