• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முதலீட்டு திட்டங்கள்: பட்டியலை வெளியிட்ட மத்திய வங்கி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முதலீட்டு திட்டங்கள்: பட்டியலை வெளியிட்ட மத்திய வங்கி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முதலீட்டு திட்டங்கள்: பட்டியலை வெளியிட்ட மத்திய வங்கி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

சமூக ஊடகங்கள், இணையதளங்கள் அல்லது நண்பர்கள் மூலம் பரவும் “குறைந்த காலத்தில் அதிக லாபம்”, “உறுப்பினர்களை இணைத்தால் கூடுதல் வருமானம்” போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்குமாறும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இலங்கையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பிரமிட் (Pyramid) முதலீட்டு திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்ட நிறுவனங்களின் புதிய பட்டியலை, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

நேற்று (05) வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடமிருந்து பணத்தை சேகரித்து, புதிய உறுப்பினர்களை இணைத்தால் அதிக வருமானம் கிடைக்கும் என உறுதியளிக்கும் திட்டங்கள் மற்றும் நடைமுறையில் சாத்தியமற்ற அளவுக்கு அதிக இலாபம் வழங்குவதாக விளம்பரப்படுத்தப்படும் முதலீட்டு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய திட்டங்கள் ஆரம்பத்தில் அதிக வருமானம் கிடைப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும், அவை நீண்ட காலத்தில் பல முதலீட்டாளர்களுக்கு பெரும் நிதி இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய மோசடி திட்டங்களாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்வதற்கு முன்பு, அந்த நிறுவனம் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா, சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதி பெற்றுள்ளதா, அதன் முதலீட்டு திட்டம் நம்பகமானதா என்பதை கட்டாயம் சரிபார்த்த பின்னரே பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு, மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சமூக ஊடகங்கள், இணையதளங்கள் அல்லது நண்பர்கள் மூலம் பரவும் “குறைந்த காலத்தில் அதிக லாபம்”, “உறுப்பினர்களை இணைத்தால் கூடுதல் வருமானம்” போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்குமாறும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களுடன் தொடர்புடைய சட்டவிரோத நிறுவனங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலையும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனங்களின் விவரங்களை அதிகாரப்பூர்வ பட்டியலில் பொதுமக்கள் பார்வையிட்டு, அவற்றுடன் எந்தவித நிதி பரிவர்த்தனைகளிலும் ஈடுபடாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய சட்டவிரோத நிறுவனங்கள்

Tiens Lanka Health Care (Pvt) Ltd 

Best Life International (Pvt) Ltd 

Mark – Wo International (Pvt) Ltd 

V M L International (Pvt) Ltd 

Global Lifestyle Lanka (Pvt) Ltd 

Fast3Cycle International (Pvt) Ltd 

Sport Chain App and Sport Chain ZS Society Sri Lanka 

OnmaxDT 

MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka and MTFE DSCC Group 

Fastwin (Pvt) Ltd 

Fruugo Oline App / Fruugo Oline (Pvt) Ltd 

Ride to Three Freedom (Pvt) Ltd 

Qnet / Questnet 

Era Miracle (Pvt) Ltd and Genesis Business School 

Ledger Block 

Isimaga International (Pvt) Ltd 

Beecoin App and Sunbird Foundation 

Windex Trading 

The Enrich Life (Pvt) Ltd 

Smart Win Entrepreneur (Pvt) Ltd 

Net Fore International (Pvt) Ltd / Netrrix 

Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd 

SGO / sgomine.com 

I.C.A.N. Advertising (Pvt) Ltd and its affiliated platforms 

Infinity Rover (Pvt) Ltd 

TM App


Princiya Dixci

WRITTEN BY

Princiya Dixci

2022ஆம் ஆண்டில் இருந்து நியூஸ்21 டிஜிட்டல் ஊடகத்தில் செய்தி ஆசிரியராக இணைந்து செய்திகளை அளித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றுவதுடன், புலனாய்வு அறிக்கை…


→

Read More

Previous Post

மலாக்காவில் உள்ள 21 இடங்களையும் பாரிசான் நேசனல் தக்கவைத்துக் கொள்ளும் – Malaysiakini

Next Post

மேகதாது அணை: “தமிழக அரசுக்கு அதிகாரமில்லை” – கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மேகதாது அணை: “தமிழக அரசுக்கு அதிகாரமில்லை” – கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி! | India News (இந்தியா செய்திகள்)

மேகதாது அணை: “தமிழக அரசுக்கு அதிகாரமில்லை” - கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin