• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இரவு கிளம்பினால் மதியம் போய் சேரலாம்! மும்பை – பெங்களூரு இடையே நாட்டின் 2-வது வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இரவு கிளம்பினால் மதியம் போய் சேரலாம்! மும்பை – பெங்களூரு இடையே நாட்டின் 2-வது வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாரத்தில் 6 நாட்கள் இயங்கவுள்ள இந்த இரயில், அனந்தபூர், ராய்ச்சூர், குண்டக்கல், கல்புரகி, சோலாப்பூர், புனே மற்றும் கல்யாண் ஆகிய முக்கிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையையும், தகவல் தொழில்நுட்ப மையமான பெங்களூருவையும் இணைக்கும் இந்த இரயில் சேவை, நடப்பு அக்டோபர் மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சேவைக்காக இரு வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் பெட்டிகள் பயன்பாட்டில் இருக்கும்.

பெங்களூருவிலிருந்து திங்கட்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்களிலும், மும்பையிலிருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களிலும் இந்த இரயில் இயங்கும். பெங்களூருவிலிருந்து இரவு 10:00 மணிக்குக் கிளம்பும் இரயில் மறுநாள் பிற்பகல் 1:50 மணிக்கு மும்பையை அடையும். மறுமார்க்கமாக மும்பையிலிருந்து இரவு 10:30 மணிக்குக் கிளம்பி மறுநாள் பிற்பகல் 2:50 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.

இந்த புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் ஹூப்ளி வழியே செல்லாமல், அனந்தபூர், ராய்ச்சூர், குண்டக்கல், கல்புரகி, சோலாப்பூர், புனே மற்றும் கல்யாண் வழியாகப் பயணிக்கும்.

இரயிலுக்குத் தேவையான குடிநீர் மற்றும் முனையப் பராமரிப்புப் பணிகளுக்காகச் சோலாப்பூர் மற்றும் புனே ஆகிய இரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களின் முக்கிய தொழிற்பேட்டைகள் மற்றும் நகரங்களை இணைப்பதால், வியாபாரிகள், பணியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இச்சேவை பெரும் பயனுள்ளதாக அமையும்.

பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், இதில் தானியங்கி கதவுகள், பயோ-வாக்கியூம் கழிப்பறைகள், சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமராக்கள், சென்சார் அடிப்படையிலான குடிநீர் குழாய்கள், போன் சார்ஜிங் பாயிண்ட்டுகள் மற்றும் டிஜிட்டல் தகவல் திரைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

மேலும் இரயிலில் உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கும் ‘ஆன்-போர்டு கேட்டரிங்’ வசதியும் உண்டு. விபத்துக்களைத் தவிர்க்கும் இந்தியாவின் உள்நாட்டு ‘கவச்’ (Kavach) தானியங்கி பாதுகாப்பு அமைப்பு மற்றும் அவசரகாலத் தொடர்பு சாதனங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More

Previous Post

சிறையில் தாக்கப்பட்ட அனோஜன்! பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உறவினர்கள்

Next Post

2027ல் தான் தங்கத்திற்கு விடிவுகாலம்.. அப்போ இனி தொடர் சரிவு மட்டும்தானா.. HSBC மூத்த தலைவர் அதிரடி.! | Gold Price Recovery Shifted to 2027: HSBC’s James Steel Explains Why Bullion Faces Pressure Until Fed Rate Cuts

Next Post
2027ல் தான் தங்கத்திற்கு விடிவுகாலம்.. அப்போ இனி தொடர் சரிவு மட்டும்தானா.. HSBC மூத்த தலைவர் அதிரடி.! | Gold Price Recovery Shifted to 2027: HSBC’s James Steel Explains Why Bullion Faces Pressure Until Fed Rate Cuts

2027ல் தான் தங்கத்திற்கு விடிவுகாலம்.. அப்போ இனி தொடர் சரிவு மட்டும்தானா.. HSBC மூத்த தலைவர் அதிரடி.! | Gold Price Recovery Shifted to 2027: HSBC’s James Steel Explains Why Bullion Faces Pressure Until Fed Rate Cuts

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin