• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இன்று ரூ.50,000 தங்கத்தில் முதலீடு செய்தால் 2036-ஆம் ஆண்டு எவ்வளவு லாபம் கிடைக்கும்? | Rs.50,000 in Gold Today Could Become this Much in 2036 after 10 years

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இன்று ரூ.50,000 தங்கத்தில் முதலீடு செய்தால் 2036-ஆம் ஆண்டு எவ்வளவு லாபம் கிடைக்கும்? | Rs.50,000 in Gold Today Could Become this Much in 2036 after 10 years
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்று ரூ.50,000 தங்கத்தில் முதலீடு செய்தால் 2036-ஆம் ஆண்டு எவ்வளவு லாபம் கிடைக்கும்?

இந்தியக் குடும்பங்களுக்கு தங்கத்தை பற்றிய தனி இன்ட்ரோ கொடுக்கத் தேவையில்லை. விலை இறங்கினாலும் சரி, ஏறினாலும் சரி தொடர்ந்து நகைக்கடைகளில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். தங்கத்தில் முதலீடு செய்தால் தேவைப்படும் நேரங்களில் பணம் பெறலாம். அதற்கு ஏற்ப கடந்த சில ஆண்டுகளில் தங்கம் கொடுத்த ரிட்டன்சை பார்த்தால் விஷயம் உங்களுக்கே புரியும்.

இனிவரும் நாட்களிலும் தங்கம் இதே போல முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை வழங்கும் என்று நிபுணர்களும் கூறி வருகின்றனர். வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலின் கருத்துப்படி, இன்று ஒருவர் ரூ.50,000 முதலீடு செய்து தங்கம் வாங்கினால் இதிலிருந்து இன்னும் 10 ஆண்டுகள் கழித்து.. அதாவது 2036-ஆம் ஆண்டில் அதன் மதிப்பு என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

இன்று ரூ.50,000 தங்கத்தில் முதலீடு செய்தால் 2036-ஆம் ஆண்டு எவ்வளவு லாபம் கிடைக்கும்?

கடந்த 10 ஆண்டு நிலவரம் (2016-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரை): 2016-ஆம் ஆண்டில் 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.28,623-க்கு விற்பனையானது. ஆனால் அதிலிருந்து 10 ஆண்டுகள் கழித்து.. 2026-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,53,250-ஐ எட்டியுள்ளது.

2026-ஆம் செப்டம்பர் 15-ஆம் தேதி நிலவரப்படி உங்களிடம் ரூ.50,000 இருந்தால் தோராயமாக 3 கிராம் தங்கம் வாங்கலாம். 2016-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2026-ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 5.35 மடங்கு அதிகரித்துள்ளது. தங்கத்தின் மூலம் கிடைத்த வருடாந்திர வருமானம் 18.6 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் 60 சதவீத ரிட்டன்சை கொடுத்துள்ளதாக வேர்ல்ட் கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த கால லாபத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அடுத்த 10 ஆண்டுகளிலும் தங்கம் இதே 18.6% வருமானத்தை வழங்கினால் உங்களுடைய ரூ.50,000 முதலீடு ரூ.2.75 லட்சமாக அதிகரித்திருக்கும். தோராயமாக ரூ.2.25 லட்சம் வரை லாபம் கிடைக்கும். கடந்த கால வருமானத்தை வைத்து இது ஒரு தோராயமான கணக்கீடு மட்டுமே. இதே வருமானம் தான் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்று கூறி விட முடியாது. தங்கத்தின் விலை சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொருத்து மாறுபடும்.

வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் 2025-ஆம் ஆண்டு தொடங்கி 2040-ஆம் ஆண்டு வரையில் தங்கம் சராசரியாக 5.2% வரை லாபம் தரும் என்று மதிப்பிட்டுள்ளது. ஆனால் இது ஒரு கணிப்பு மட்டுமே. ஆண்டுக்கு 5.2 சதவீத வருமானம் என்ற அடிப்படையில் பார்க்கும்போது நீங்கள் இன்று செய்யும் ரூ.50,000 முதலீடு அடுத்த 10 ஆண்டுகளில் 83,000 ரூபாயாக இருக்கும். ரூ.33,000 வரை லாபம் கிடைக்கும்.

இதைவிட தங்கம் சிறப்பாக செயல்பட்டால் வருமானம் இன்னும் அதிகரிக்கும். உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் தங்கம் 8 சதவீத ரிட்டன்ஸ் கொடுத்தால் உங்களுடைய ரூ.50,000 முதலீடு 2036-ஆம் ஆண்டுக்குள் ரூ.1.08 லட்சமாக அதிகரித்திருக்கும். கிட்டத்தட்ட ரூ.58,000 வரை லாபம் கிடைக்கும்.

அதுவே இன்று முதல் தங்கம் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத ரிட்டன்ஸ் கொடுத்தால் உங்களுடைய ரூ.50,000 முதலீடு ரூ.1.30 லட்சத்தை தாண்டும். இதிலிருந்து சுமார் ரூ.79,000 லாபம் கிடைக்கும். அதுவே தங்கம் 12 சதவீத வருமானம் கொடுத்தால் உங்கள் ரூ.50,000 முதலீடு ரூ.1.55 லட்சமாக மாறி இருக்கும். கிட்டத்தட்ட ரூ.1.05 லட்சம் லாபம் கிடைக்கும்.

இவை எதிர்பார்க்கப்படும் வருமானம் மட்டுமே. உறுதியாக தங்கம் இதே ரிட்டன்ஸ் கொடுக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. இதை விட அதிகமாகவும் தரலாம் அல்லது இதைவிட குறைவாகவும் இருக்கலாம். தங்கம் விலை பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு மாறுபடுகிறது. அமெரிக்க பெட்ரோல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம், டாலரின் மதிப்பு, பணவீக்கம், புவிசார் அரசியல் பதற்றங்கள், முதலீட்டாளர்களின் தேவை, மத்திய வங்கிகளின் தங்க இருப்பு ஆகியவற்றையெல்லாம் பொறுத்தே தங்கத்தின் விலை இருக்கும்.

2026 ஆம் ஆண்டில் முதல் பாதியில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. பின்னர் விலை இறங்கியது. இப்படி ஏற்ற இறக்கத்தில் தான் இந்த ஆண்டு சென்று கொண்டிருக்கிறது. எப்படி பார்த்தாலும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது தங்கத்தின் விலை சற்று அதிகரித்திருக்கிறது.

ஆனால் இனி வரும் ஆண்டுகளிலும் இதே போல இருக்கும் என்றும் கூறமுடியாது. திடீர் விலை சரிவும் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் தங்கத்தில் போடும் ரூ.50,000 முதலீடு தோராயமாக அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.83,000 முதல் ரூ.1.55 லட்சம் வரை வருமானத்தை வழங்கலாம். அதுவே கடந்த 10 ஆண்டு பர்பாமன்ஸ் அடிப்படையில் பார்த்தால் உங்களுடைய ரூ.50,000 முதலீடு ரூ.2.75 லட்சத்தையும் தாண்டும்.

Share This Article

Story first published: Tuesday, September 15, 2026, 17:12 [IST]

Other articles published on Sep 15, 2026

Read More

Previous Post

Tamilmirror Online || மட்டக்குதிரைகளால் தொடரும் விபத்து

Next Post

BU பள்ளி கொலை வழக்கில் உயிரிழந்த மாணவரின் தாய், குற்றவாளி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் மனுவுக்கு ஆதரவு கோருகிறார் – Malaysiakini

Next Post

BU பள்ளி கொலை வழக்கில் உயிரிழந்த மாணவரின் தாய், குற்றவாளி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் மனுவுக்கு ஆதரவு கோருகிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin