ஐந்தாம் கட்டத் தேர்தலில் மகாராஷ்டிரத்தில் அதிகளவிலான தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என்றும், இடமேயில்லாத பிகாரிலும் இடங்களைப் பெற முடியும் என்றும் இந்தியா கூட்டணி நம்புகிறது.
ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் மீதியுள்ள இரண்டு ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி வசமுள்ளவை. மற்றொரு தொகுதி ஜம்மு – காஷ்மீரில் இருக்கிற எல்லைகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட தொகுதி.
இன்று களம் காண்பவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்:
ரே பரேலியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. நாடு விடுதலை பெற்றதிலிருந்து ஒரே ஒரு முறை தவிர, தொடர்ந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுவரும் தொகுதி. ஏற்கெனவே வயநாட்டில் போட்டியிட்டபோதிலும் வட இந்தியாவிலும் போட்டியிட வேண்டும் என்பதற்காக இங்கேயும் ராகுல் காந்தி போட்டியிடுவதாகக் கருதப்படுகிறது. இந்த முறை வாக்கு வித்தியாசத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறது காங்கிரஸ்.
லக்னௌவில் போட்டியிடும் ராஜ்நாத் சிங். தொடர்ந்து பல முறை முன்னாள் பிரதமர் வாஜபேயி வெற்றி பெற்ற இதே தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவதற்கான முனைப்பில் இருக்கிறார்.
அமேதியில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி. கடந்த முறை இந்தத் தொகுதியில் ராகுல் காந்தியைத் தோற்கடித்தார். இந்த முறை அமேதியைத் தவிர்த்து ரே பரேலியில் போட்டியென ராகுல் காந்தி அறிவித்ததும் அதற்காகக் கேலி செய்தார். ஆனால், காந்திகளின் குடும்பத்துக்கு நெருக்கமான கே.எல். சர்மாவை இங்கே நிறுத்தியுள்ள காங்கிரஸ், சப்தமில்லாமல் இரானியைத் தோற்கடிக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது.

&w=1200&resize=1200,675&ssl=1)