ஐபிஎல் 17ஆவது சீசனில், பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் 4ஆவது அணியை தீர்மானிக்கும் போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதின. மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே பெங்களூரு அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனால் சிஎஸ்கே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தங்கள் அணி வெளியேறியதால் மட்டும் இல்லாமல், தோனியின் கடைசி சீசனில் கோப்பையை வெல்ல முடியவில்லை என்று வருந்தினர். இந்த நிலையில் சிஎஸ்கே அதிகாரி ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்லியுள்ளார்.
இதையும் படிக்க:
தோனி இப்படி செய்யலாமா? ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்றதால் வெடித்த சர்ச்சை
இதுகுறித்து சொன்ன அந்த அதிகாரி, தோனி தனது ஓய்வு குறித்த முடிவை இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. மற்ற வீரர்களிடமும் அதுகுறித்து எதுவும் பேசவில்லை. சிஎஸ்கே பிளேஆஃபில் இருந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே தனது முடிவு குறித்து அறிவிக்கும் முன் சில மாதங்கள் காத்திருக்குமாறு தெரிவித்தார்.
மேலும் தோனியின் முடிவில் இம்பாக்ட் பிளையர் விதி முக்கிய பங்கு வகிக்கும். இந்த விதி தொடர்ந்தால், தோனி மீண்டும் விளையாட வாய்ப்பு உள்ளது. அதுவே இம்பாக்ட் பிளேயர் விதி ரத்து செய்யப்பட்டால், அவர் மீண்டும் விளையாடுவது சந்தேகம்தான் என சிஎஸ்கே அதிகாரி தெரிவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
