• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்த 5 விஷயங்களை மட்டும் யாரிடமும் பகிராதீர்கள்

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
இந்த 5 விஷயங்களை மட்டும் யாரிடமும் பகிராதீர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மனிதன் தனது வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக் கொள்ள, வெற்றிகரமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு என்னென்ன யுக்திகளை கையாள வேண்டும் என்பதை ஆச்சாரியார் சாணக்கியர் தனது சாணக்கிய நீதி நூலில் குறிப்பிட்டுள்ளார். அதே போல் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், எதிரிகளை வெல்ல வேண்டும் என்பவர்கள் எந்த மாதிரியான யுக்திகளை கையாள வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட தந்திர யுக்திகளில் ஒன்று தான் யாரிடமும் பகிரக் கூடாத விஷயங்கள் . எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் சில விஷயங்களை மட்டும் மற்றவர்களிடம் பகிரவே கூடாது என சாணக்கியர் கூறுகிறார்.

எந்தெந்த விஷயங்களை யாரிடமும் பகிராமல் இருந்தால் வாழ்க்கையில் எதிரிகளை வீழ்த்தி, வெற்றி பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1. பொருளாதாரம்

பொருளாதாரம் அல்லது நிதி நிலையில் உங்களுக்கு ஏற்பட்ட அல்லது தற்போது இருக்கும் சரிவுகளை யாரிடம் சொல்லக் கூடாது. அப்படி பகிர்ந்து கொள்வதால் மற்றவர்கள் உங்களை தாழ்வாக மதிப்பிட அது வழி வகுக்கும். உங்களுக்கு உதவி செய்வதற்கு பதில், உங்களை பற்றி மற்றவர்களிடம் கேலி பேசி சிரிக்கலாம். சிலர் உங்களின் நட்பையே துண்டித்துக் கொள்ள வாய்ப்புள்ளது. எதிரிகள் உங்களின் பலவீனம் எது என்பதை தெரிந்து கொண்டு, உங்களை வீழ்த்த, உங்களுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. உங்கள் பிரச்சனையை மற்றவர்களிடம் பகிர்வதை விட, அந்த நிதி இழுப்பை எப்படி சரி செய்வது என யோசித்து செயல்படலாம். சரியான நபர்களிடம் அது பற்றி ஆலோசனை கேட்கலாம்.

2. பலவீனம், குழப்பம் :

யாரிடமும் உங்களின் பலவீனங்கள், கவலைகள், மனதில் இருக்கும் குழப்பங்கள் ஆகியவை குறித்த விஷயங்களை பகிரக் கூடாது. அப்படி பகிர்வதால் உங்களின் முகத்திற்கு முன்னால் அவர்கள் அனுதாபம் காட்டுவதை போல் இருந்தாலும், பின்னால் சென்று உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளது. உங்களின் பலவீனங்களை வீழ்த்துவதால் அதையே அவர்கள் உங்களை எளிதில் வீழ்த்துவதற்கான ஆயுதமாக பயன்படுத்துவதற்கும் வாய்ப்புள்ளது. அதே போல் மனக்குழப்பங்கள், கவலைகள் ஆகியவற்றையும் பகிர்வதால் அதையும் அவர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, உங்களை எளிதில் நிலைகுலைய வைக்க முடியும்.

3. குடும்ப பிரச்சனைகள் :

குடும்பத்தில் நடக்கும் சண்டைகள், பிரச்சனைகள் ஆகியவற்றை ஒரு போதும் மற்றவர்களிடம் பகிரவே கூடாது. வீட்டின் கண்ணியத்தையும், மரியாதையையும் இது பாதிக்கக் கூடும். இதனால் அந்த பிரச்சனையை வைத்து அவர்கள் எந்த வகையில் ஆதாயம் அடைய முடியும் என நினைக்க வாய்ப்பு கொடுப்பது போல் ஆகி விடும். குடும்பத்தில் எப்போதும் மூன்றாவது நபர்களின் தலையீட்டை தவிர்த்து, அமைதியாக நாமே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

4. அவமதிப்பு மற்றும் துரோகம் :

மற்றவர்கள் நம்மை அவமரியாதையாக நடத்துவது, துரோகம் செய்வது ஆகியவற்றை பெரும்பாலானவர்கள் தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் அவற்றை நீங்கள் பகிரும் போது அந்த நபர் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைய கூடும். அவர்களின் ஆழ்மனதில் உண்மையில் நீங்கள் அவமரியாதைக்கு ஏற்றவர் தானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதே போல் மற்றவர்கள் உங்களுக்கு செய்த துரோகங்களை நீங்கள் சொல்லும் போது, உங்களின் திறமையின்மை அல்லது பலவீனத்தை வெளிப்படுத்தி, உங்களை மற்றவர்கள் எந்தெந்த வழிகளில் ஏமாற்ற முடியும் என்பதை நீங்களே அவர்களுக்கு வெளிப்படுத்துவது போல் ஆகி விடும்.

5. எதிர்கால திட்டங்கள், யுக்திகள் :

உங்களின் லட்சியங்களை, நீங்கள் அடைய நினைக்கும் இலக்குகளையும், அவற்றை அடைவதற்காக நீங்கள் வகுத்து வைத்திருக்கும் திட்டங்கள் மற்றும் யுக்திகளை யாரிடமும் பகிரக் கூடாது. உங்களை எதிரியாக நினைப்பவர்கள் அதற்கு தடை ஏற்படுத்தி, உங்களின் லட்சியத்தை நிறைவேற விடாமல் தடுக்க வாய்ப்புள்ளது. அதே போல் உங்களின் யுக்திகளையும் அவர்கள் தெரிந்து கொண்டால், அதை உங்களை வீழ்த்துவதற்காகவும் அவர்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் எந்த செயலையும் செய்து முடிக்கும் வரை அமைதி காக்க வேண்டும்.

The post இந்த 5 விஷயங்களை மட்டும் யாரிடமும் பகிராதீர்கள் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

JIO ஐபிஓ-வில் முதலீடு செய்யும் முன் இதை படிங்க..! | Jio Platforms IPO Retail Subscription Guide: ₹30,213 Crore Issue, 12-Share Lot Size, and Category Application Breakdown

Next Post

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குமார் தொடர்ந்தும் போராட்டம் – Sri Lanka Tamil News

Next Post
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குமார் தொடர்ந்தும் போராட்டம் – Sri Lanka Tamil News

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குமார் தொடர்ந்தும் போராட்டம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin