03
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “நடப்பு நிதியாண்டு 31.03,3025 அன்று முடிவடைவதன் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி சொத்து வரி, தொழில் வரி மற்றும் நிறும வரி செலுத்துவதற்காகவும், தொழில் உரிமம் புதுப்பிப்பதற்காகவும், பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை வரும் 29.03.2025, 30.03.2025 மற்றும் 31.03.2025 ஆகிய விடுமுறை நாட்களிலும் இயங்கும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


