மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை (பெர்மிம்), முஸ்லீம் லீக் நிர்வாகக் குழுவின் பிரதிநிதிகள், அதன் தலைவர்கள் முஹம்மது அஸ்மான் ஷாஹ், டத்தோ ஸ்ரீ ஹாஜா நஜ்முதீன் தலைமையில், அமைச்சின் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டுத் துணைப் பொதுச்செயலாளர் டத்தோ ஹாஜி மக்ஷான் பின் மஹியுத்தீன், தேசியப் பதிவுத் துறை அதிகாரிகளுடன் புத்ராஜெயாவில் உள்ள உள்துறை அமைச்சின் அலுவலகத்தில் விரிவான கலந்துரையாடல் நடத்தினர்.
இக்கலந்துரையாடலில் கூட்டு ஒத்துழைப்புக்கான முன்மொழிவுபாதுகாப்பு, இன நல்லிணக்கம், சமூக மேம்பாடு தொடர்பான திட்டங்களில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டது. இந்திய முஸ்லிம் சமூகப் பிரச்சினைகள் – மலேசியாவிலுள்ள இந்திய முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து பெர்மிம் மற்றும் முஸ்லிம் லீக் கூட்டமைப்பு தரப்பில் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காகவும் வலியுறுத்தப்பட்டது.
தொடர் நடவடிக்கைகள் – இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி, பெர்மிம் மற்றும் முஸ்லிம் லீக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் உள்விவகார அமைச்சு விரிவாகப் பரிசீலிக்கும்.
இந்த சந்திப்பில், பெர்மிமின் துணைத் தலைவர் ஹாஜி முகமது சுல்தானும் கலந்து கொண்டார். பெர்மிம், முஸ்லிம் லீக் கூட்டமைப்பு மற்றும் உள்விவகார அமைச்சு ஆகிய தரப்பினருக்கு இடையிலான இந்தச் சந்திப்பு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் இணக்கமான மற்றும் ஆக்கபூர்வமான சூழலில் நடைபெற்றது என்று பெர்மிமின் தலைவர் அஸ்மான்ஷாஹ் கூறினார்.




