Last Updated:
சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்பராஸ் கானும், இடது முழங்கால் காயத்தால் விலகிய பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபியும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு, அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் காயத்தால் விலகி வருவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் ஆகியோர் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து முற்றிலும் விலகிய நிலையில், தற்போது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரும் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் நீடிக்கிறது.


