• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய ஐடி துறையில் நடக்கும் விசித்திரம்.. அமெரிக்காவில் கூட நடக்காத விஷயம் இங்க நடக்குது..! | AI Creates More Jobs Than It Destroys in India: Nomura Report Shows 83,100 Hires vs 31,921 Layoffs

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்திய ஐடி துறையில் நடக்கும் விசித்திரம்.. அமெரிக்காவில் கூட நடக்காத விஷயம் இங்க நடக்குது..! | AI Creates More Jobs Than It Destroys in India: Nomura Report Shows 83,100 Hires vs 31,921 Layoffs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய ஐடி துறையில் நடக்கும் விசித்திரம்.. அமெரிக்காவில் கூட நடக்காத விஷயம் இங்க நடக்குது..!

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், வியட்நாம், பிளிப்பைன்ஸ் வரையில் உலகளாவிய ஐடி சேவை துறையை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் ஏஐ. செயற்கை நுண்ணறிவு மூலம் பல வேலைகளை ஆட்டோமேட் செய்ய முடியும் என்பதால் ஊழியர்களுக்கான தேவை நாளுக்கு நாள் குறைந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.

இதனாலேயே அமெரிக்கா, பிரிட்டன் என உலகின் பெரும் பொருளாதார நாடுகளில் இருக்கும் டெக் நிறுவனங்களில் ஊழியர்களை கண்ணை மூடிக்கிகொண்டு பணிநீக்கம் செய்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மாறுப்பட்ட விஷயம் நடந்து வருவதை நோமுரா ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்திய ஐடி துறையில் நடக்கும் விசித்திரம்.. அமெரிக்காவில் கூட நடக்காத விஷயம் இங்க நடக்குது..!

உலகில் எந்தொரு நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் ஏஐ மூலம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களை காட்டிலும் ஏஐ-காக பணியில் அமர்த்தப்படும் ஊழியர்கள் அதிகமாக உள்ளனர் என நோமூரா ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்த ஒரு தகவல் ஏஐ மூலம் பணிநீக்கம் அதிகரிக்கிறது என்ற அச்சத்தை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது என்பது தான் டெக் ஊழியர்கள் மத்தியில் தற்போது நிலவும் புது விவாதமாக உள்ளது.

இதன் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு முக்கியமான உதாரணமாக மாறி வருகிறது, ஏஐ மூலம் பணிநீக்கம் மட்டுமே நடக்கும் என்ற சூழ்நிலையில் எப்படி புதிய மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வேலைவாய்ப்பு சந்தையில் சமநிலையை உருவாக்க முடிகிறது என்பதற்கான real-world test case ஆக உள்ளது.

உலக நாடுகளின் Back Office ஆக கருதப்படும் இந்தியாவில் பல விதமான, பல துறைக்கான ஐடி சேவை பணிகளை செய்து வருகிறது. இப்படியிருக்கையில் ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக பெரும் பாதிப்பு உருவாகியிருக்க வேண்டும்.

ஆனால் ஏஐ அடிப்படையிலான பணி அமர்த்தல், பணிநீக்கம், ஆட்சேர்ப்பை நிறுத்தியது, புதிய பணிக்கான தேவையில் மாற்றம் போன்றவற்றை பார்க்கும் போது இந்தியாவில் ஏஐ மூலம் வேலைவாய்ப்பு துறையில் ஜீரோ பாதிப்பு இருப்பதாக நோமுரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2022 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் ஏஐ மூலம் 31,921 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 83,100 பேர் ஏஐ தொடர்பான பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர், இதனால் ஏஐ துறையில் இந்தியாவில் சுமார் இழக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை காட்டிலும் 2.5 மடங்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஏஐ மூலம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பெருமளவில் சப்போர்ட், வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருக்கும் ஊழியர்களாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தற்போது ஏஐ மூலம் திறன்மிக்க சேட்பாட் மற்றும் ஆட்டோமேஷன் டூல் வந்துவிட்ட காரணத்தால் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதையும் நோமுரா தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.

சரி, இந்தியாாவில் ஏஐ மூலம் பாதிப்பே இல்லையா என்றால்..? கட்டாயம் இருக்கிறது. ஐடி சேவை துறையில் இருக்கும் இந்தியா உட்பட பல நாடுகளில் இத்துறை வேலைவாய்ப்பு என்பது 2 கட்டமாக பிரிக்கப்படுகிறது. என்டரி லெவல், அனுபவம் பெற்ற ஊழியர்கள்.

ஏஐ தொழில்நுட்பம் வந்த பின்பு பிரஷ்ஷர்கள் மற்றும் என்டரி லெவல் (0-2 வருட அனுபவம்) ஊழியர்களுக்கான தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது. காரணம் இவர்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளை சாட்பாட் அல்லது ஆட்டோமேஷன் வாயிலாக செய்து முடிக்க முடியும் என்பதால் இவர்களுக்கான தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது.

இதேவேளையில் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள், குறிப்பாக சிறிய அளவிலான ஏஐ தொடர்பான திறன் இருந்தால் கூட இவர்களுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது.

மேலும் நோமுரா ஆசிய சந்தையை டார்கெட் ஆக வைத்து செய்த ஆய்வில், ஆசியா முழுவதும் ஏஐ தொடர்பான 1,30,758 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது, இதில் 90 சதவீகம் டெக் துறையில் இருந்தது. இதேவேளையில் 60,654 வேலைவாய்ப்புகள் நீக்கப்பட்டு உள்ளது, இதில் 60 சதவீத பணிநீக்கம் நிதியியல் துறையில் மட்டுமே நடந்துள்ளது.

Share This Article

English summary

AI Creates More Jobs Than It Destroys in India: Nomura Report Shows 83,100 Hires vs 31,921 Layoffs

AI Creates More Jobs Than It Destroys in India: Nomura Report Shows 83,100 Hires vs 31,921 Layoffs — இந்திய ஐடி துறையில் நடக்கும் விசித்திரம்.. அமெரிக்காவில் கூட நடக்காத விஷயம்..!

Story first published: Saturday, August 8, 2026, 10:21 [IST]

Other articles published on Aug 8, 2026

Read More

Previous Post

அம்பேத்கர் அறக்கட்டளையின் 2 திட்டங்கள் மத்திய நிதியுதவி திட்டத்துடன் இணைப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மலாக்கா தொகுதிப் பங்கீடு மற்றும் இடமாற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பாரிசான் தயார் – ஜாகித் – Malaysiakini

Next Post

மலாக்கா தொகுதிப் பங்கீடு மற்றும் இடமாற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பாரிசான் தயார் – ஜாகித் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin