Last Updated:
தனது வாழ்க்கையில் நடந்த எதுவும் வீணாகவில்லை என்றும், ஒவ்வொரு அனுபவமும் தனக்கு ஏதோ ஒன்றை கற்றுக் கொடுத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவோம் என்று டெல்லியில் நடந்த ‘வளர்ந்த இந்தியா’ உறுதிமொழி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
‘வளர்ந்த இந்தியா’ உறுதிமொழி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, 2001ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்ற போது, இந்த மைல் கல்லை அடைவேன் என்று தான் நினைத்து பார்த்ததில்லை என்று கூறினார்.
தனது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பிரதமர் மோடி, தான் எப்போதும் கற்றுக் கொள்வதில் ஒரு மாணவரை போன்று ஆர்வத்துடன் இருப்பேன் எனத் தெரிவித்தார். மேலும், லட்சியத்தை விட கடமையை செய்வதே தனது தர்மம் என்றார்.
தனது வாழ்க்கையில் நடந்த எதுவும் வீணாகவில்லை என்றும், ஒவ்வொரு அனுபவமும் தனக்கு ஏதோ ஒன்றை கற்றுக் கொடுத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
25 ஆண்டுகள் அரசுப் பதவியில் நீடிக்க நாட்டு மக்களின் ஆசியே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தான் சந்தித்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தனக்கு வெற்றியை பரிசளித்த மக்களுக்கு நன்றிக்கடன் பட்டு இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


