• Login
Sunday, June 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவை இனி தொட முடியாது.. 3 அதிநவீன போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி! | PM modi to commission 3 indigenous designed Naval warships to nation

GenevaTimes by GenevaTimes
June 21, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவை இனி தொட முடியாது.. 3 அதிநவீன போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி! | PM modi to commission 3 indigenous designed Naval warships to nation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Nantha Kumar R

Time
Updated: Sunday, June 21, 2026, 11:31 [IST]

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய், ஐஎன்எஸ் சன்ஷோதக் உள்ளிட்ட 3 அதிநவீன போர்க்கப்பல்களை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இந்த கப்பல்கள் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.

மத்திய அரசு சார்பில் நம் நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்​திய அரசின், ‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுய​சார்பு இந்​தி​யா) திட்​டத்​தின் கீழ் இந்தியக் கடற்படையின் போர்க்​கப்​பல் வடிவ​மைப்​புப் பணி​யகம் 3 புதிய கப்பல்களை தயாரித்துள்ளது. இந்த கப்பல்களில் உள்ள 75 சதவீத பொருட்கள் இந்தியாவில் சேர்ந்தவை.

pm-modi-to-commission-3-indigenous-designed-naval-war-ships-to-nation

இந்த கப்பல்களின் பெயர்கள் ஐஎன்எஸ் துனகிரி (INS Dunagiri), ஐஎன்எஸ் அக்ராய் (INS Agray), ஐஎன்எஸ் சன்​ஷோதக் (INS Sanshodak) என்பதாகும். கொல்​கத்​தாவைச் சேர்ந்த பொதுத்​துறை நிறு​வன​மான கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்ட் இன்​ஜினீயர்ஸ் நிறுவனம் தான் இந்த கப்பல்களை தயாரித்துள்ளது.

இந்த கப்பல்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று ஐஎன்எஸ் துனகிரி (InS Dunagiri), ஐஎன்எஸ் அக்ராய் (INS Agray) மற்றும் ஐஎன்எஸ் சன்​ஷோதக் (INS Sanhodhak)உள்ளிட்ட அதிநவீன போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒரே நேரத்தில் இந்த 3 கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைப்பது என்பது நம் நாட்டின் பாதுகாப்புக்கு கூடுதல் வலிமை சேர்க்கும்.

இதில் ஐஎன்​எஸ் துனகிரி போர்க் கப்​பலானது நம் நாட்டின் புராஜெக்ட் 17 ஏ என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 5வது அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பலாகும். இந்த போர்க்கப்பல் அட்வான்ஸ்ட் ஸ்டெல்த் வகையை சேர்ந்தது. இதனால் எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் துல்லியமாக தாக்குதல் நடத்தும். பிர​மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவு​கணை​கள் மற்​றும் நடுத்தர தூர வான் பாது​காப்பு ஏவு​கணைகளை இந்த போர்க்கப்பலில் வைத்து எதிரிகளின் இலக்குகளை குறிவைத்து தாக்கி அழிக்க முடியும்.

அதேபோல், ஐஎன்​எஸ் அக்​ராய் கப்​பலானது கடலில் இருக்கும் அச்சுறுத்தலை கண்டுபிடித்து அழிக்கும் திறன் கொண்டது. கடலுக்கடியில் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து அழிக்கும் வகையில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ‘அர்​னாலா கிளாஸ்’ எனப்​படும் ஆழமற்ற கடற்​பகு​தி​யில் பயணிக்​கும் நீர்​மூழ்​கி எதிர்ப்​புப் போர்க்​கப்​பல் ஆகும். இந்த கப்பலில் இலகுரக டார்பிடோக்கள், ராக்கெட் லாஞ்சர்கள், சோனார் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் ஐஎன்​எஸ் சன்​ஷோதக் கப்​பலானது ஆய்வு கப்பலாகும் (Survey ships). இது கடலாய்​வு பணி​களுக்​காக வடிவ​மைக்​கப்​பட்ட 4-வது பெரிய சர்வே கப்​பலாக உள்ளது. . ஆழ்​கடல் மற்​றும் கடலோர பகு​தி​களில் உள்ள நிலப்​பரப்​பு​களை துல்​லிய​மாக வரைபடம் தயாரிக்க இந்​தக் கப்​பல் உதவும். இந்த ஆய்வுகளை துல்லியமாக மேற்கொள்ள இந்த கப்பலில் ஏயூவி மற்றும் ஆர்ஓவி உள்ளிட்ட மேம்பட்ட ஆய்வு அமைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Naval Warships: PM Narendra Modi to comission three indigenously designed and built naval ships – INS Dunagir, an advaced stealth frigate, INS Sanshodhak, a Survey vessel (Large) and INS Agray,an anti subarine warfare shallow water craft.

Read More

Previous Post

பச்சை குத்துவதால் எச்.ஐ.வி தொற்று ஏற்படும் அபாயம்

Next Post

6,6,6,6,6,6,6,6,4,4,4,4… பவுலர்களுக்கு மரண பயம் காட்டிய வைபவ் சூரியவன்ஷி… உலக சாதனை முறியடிப்பு! | Vaibhav Sooryavanshi | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
6,6,6,6,6,6,6,6,4,4,4,4… பவுலர்களுக்கு மரண பயம் காட்டிய வைபவ் சூரியவன்ஷி… உலக சாதனை முறியடிப்பு! | Vaibhav Sooryavanshi | விளையாட்டு போட்டோகேலரி

6,6,6,6,6,6,6,6,4,4,4,4... பவுலர்களுக்கு மரண பயம் காட்டிய வைபவ் சூரியவன்ஷி... உலக சாதனை முறியடிப்பு! | Vaibhav Sooryavanshi | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin