• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவில் ஜீரோ புரட்சி.. உங்களின் சொத்து, பணம், சம்பளம்.. அனைத்தும் மாயமாகும்! | India’s Silent Economic Crisis: Boiled Frog Syndrome Explained – How Rupee Fall, E20 Petrol, Home Loans & AI Are Quietly Eroding Your Wealth

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவில் ஜீரோ புரட்சி.. உங்களின் சொத்து, பணம், சம்பளம்.. அனைத்தும் மாயமாகும்! | India’s Silent Economic Crisis: Boiled Frog Syndrome Explained – How Rupee Fall, E20 Petrol, Home Loans & AI Are Quietly Eroding Your Wealth
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் ஜீரோ புரட்சி.. உங்களின் சொத்து, பணம், சம்பளம்.. அனைத்தும் மாயமாகும்!

பொருளாதார ரீதியாக தற்போது நம்மை சுற்றி பல விஷயங்கள் நடக்கிறது, ஆனால் இதை எதையுமே மக்கள் பார்த்து அஞ்சுவதோ, அல்லது பயப்படுவதோ இல்லை என்பது தான் உண்மை. இதை பர்சனல் பைனானஸ் உலகில் Boiled Frog Syndrome என்று அழைப்பார்கள்.

இதை அடிப்படையாக வைத்து அக்ஷத் ஸ்ரீவஸ்தவா டிவிட்டரில் ஒரு முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளார். இந்தியா மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், எவ்விதமான புரட்சியும் உருவாகாது.. என்று துவங்கும் இவருடைய பதிவில் 5 முக்கிய பாயின்ட்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஜீரோ புரட்சி.. உங்களின் சொத்து, பணம், சம்பளம்.. அனைத்தும் மாயமாகும்!

1. ரூபாய் மதிப்பு சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது அனைவருக்கும் தெரியும். இந்த ஒரு விஷயத்தால் நாட்டு மக்களின் Purchasing Power அதாவது வாங்கும் திறன் பெரிய அளவில் குறையும்.

ஒருவேளை ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 200 ரூபாய் வரையில் குறையும் என்றால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக்ஸ், இயந்திரங்களின் விலை அதிகரிக்கும். இதனால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் 1 லட்சம் ரூபாய் பணத்திற்கு 50000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை மட்டுமே வாங்க முடியும். காரணம் ரூபாய் மதிப்பு சரிவால் உங்களுடைய செல்வம் குறையும்.

2. E20 பெட்ரோல்
இந்தியா முழுவதும் E20 பெட்ரோல் பயன்பாட்டு மூலம் வாகனங்களில் மைலேஜ் குறைவது மட்டும் அல்லாமல் கார்களின் உதிரிபாகங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆனாலும் காருக்கு ஈஎம்ஐ தவறாமல் மக்கள் செலுத்தி வருகின்றனர்.

ஒருவேளை E20 பெட்ரோல் மூலம் உங்களுடைய கார் பழுதாகி முழுமையாக பயன்படுத்த முடியாமல் முடங்கினாலும் ஈஎம்ஐ செலுத்தி தான் ஆக வேண்டும். இதிலும் ஜீரோ புரட்சி தான்.

3. வீட்டுக்கடன்
வங்கிகள் தங்களுடைய லாப நோக்கத்திற்காக வீட்டுக்கடனுக்கான ஈஎம்ஐ அதிகரித்தால், மக்கள் அனைவரும் கூடுதல் ஈஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும்.

அப்படி செலுத்தும் போது ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டும் பெரிய அளவில் பாதிக்கப்படும், இதனால் மக்கள் கூடுதல் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும். இதையும் மக்கள் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் நிலை தான் இந்தியாவில் தொடர்கிறது.

4. சம்பளம் Vs பணவீக்கம்
உங்களுடைய சம்பள உயர்வு, பணவீக்க அளவீட்டை தாண்டவில்லை என்றால்.. உங்களுடைய வருமானம் எந்த வகையிலும் உயராது. இது இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்களும், நிறுவனங்களிலும் நடக்கிறது, இதிலும் ஜீரோ புரட்சி..

உதாரணமாக இப்போது பணநீக்கம் 7 சதவீதமாக இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள், உங்களுடைய நிறுவனம் 3-4 சதவீதம் சம்பள உயர்வு கொடுத்தால்.. உங்களுடைய வாழ்க்கையை தற்போதைய Lifestyle-ல் நடத்துவது கடினம்.

5. ஏஐ – வேலைவாய்ப்பு
ஏஐ தொழில்நுட்பம் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை அழித்து வரும் பட்சத்தில், உங்களுடைய வேலைக்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லாமல் உள்ளது. உதாரணமாக ஏஐ தொழில்நுட்பம் தற்போது பல்வேறு வொயில் காலர் வேலைகள், சேவைத்துறை வேலைகளையும் எளிதாக ஆட்டோமேட் செய்து வருகிறது.

உலக நாடுகள் புதிய துறையில் புதிய லேவையாப்புகளை உருவாக்குவதை காட்டிலும் அதிகப்படியான வேலைகள் நீக்கப்பட்டு வருகிறது. இதனால் உலகளவில் இந்தியா தான் அதிகப்படியான job displacements-ல் முதல் நாடாக உள்ளது என அக்ஷத் ஸ்ரீவஸ்தவா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த 5 விஷயமும் அமைதியான பாதிப்பு, இதனால் மக்கள் மத்தியில் எவ்விதமான எழுச்சியும், மாற்றமும் ஏற்படவில்லை.

உதாரணமாக மக்கள் மத்தியில் திடீர் மாற்றம், திடீர் முடக்கம் போன்றவை நடந்தால் பெரும் புரட்சி வெடிக்கும். உதரணமாக பஞ்சம், வங்கி சேவை முடக்கம், சொத்து முடக்கம், மக்களுக்கு எதிரான கருத்துக்களை அரசோ அல்லது அரசியல் தலைவர்களோ முன்வைக்கும் போது பெரும் புரட்சி நடக்கும்.

ஆனால் ஒருவிஷயம் மக்களை பாதித்தாலும், அதை மெல்ல மெல்ல மக்களே உணராத வகையில் நடந்தால் புரட்சி வெடிக்காது. உதாரணமாக விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றை கண்டு மக்கள் அதிகம் கேள்வி கேட்பது இல்லை. இதை தான் Boiled Frog Syndrome என அழைக்கப்படுகிறது.

இந்த வார்த்தை உருவானத்திற்கும் ஒரு காரணம் உள்ளது. கொதிக்கும் தண்ணீரில் தவளையை போட்டால் உடனே குதித்து ஓடிவிடும், இதே அந்த தவளையை குளிர்ந்த நீரில் போட்டுவிட்டு, அதை மெல்ல மெல்ல சூடேற்றினால் தவறை வெந்து இறக்கும் வரையில் அதிலேயே இருக்கும். இப்படி தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராமேலேயே தவளை இறந்துவிடும்.

Share This Article

English summary

India’s Silent Economic Crisis: Boiled Frog Syndrome Explained – How Rupee Fall, E20 Petrol, Home Loans & AI Are Quietly Eroding Your Wealth

India’s Silent Economic Crisis: Boiled Frog Syndrome Explained – How Rupee Fall, E20 Petrol, Home Loans & AI Are Quietly Eroding Your Wealthஇந்தியாவில் ஜீரோ புரட்சி.. உங்களின் சொத்து, பணம், சம்பளம்.. அனைத்தும் மாயமாகும்!

Story first published: Sunday, July 26, 2026, 13:30 [IST]

Other articles published on Jul 26, 2026

Read More

Previous Post

உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு முதல்முறை.. ரகசியமாக போட்டியை பார்க்க வந்து ரசிகர்களின் கேமராவில் சிக்கிய மெஸ்ஸி! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post

குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடிகை சனம் ஷெட்டி போராட்டத்தில் பங்கேற்றார் – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி | Makkal Osai

Next Post
குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடிகை சனம் ஷெட்டி போராட்டத்தில் பங்கேற்றார் – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி | Makkal Osai

குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடிகை சனம் ஷெட்டி போராட்டத்தில் பங்கேற்றார் - கரப்பான் பூச்சி ஜனதா கட்சி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin