Last Updated:
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் தொழில் துறையினரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் அணுசக்தி பயணத்திற்கு ஆஸ்திரேலியா வலுசேர்க்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தோனேஷிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ளார். மெல்போர்ன் சென்ற பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, இரு நாட்டு உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடுகள் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது, இரு தலைவர்களின் முன்னிலையில் மின்சார உற்பத்தி உள்ளிட்ட அமைதி நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு யுரேனியத்தை வழங்குவது, எரிசக்தி வர்த்தகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உறவு கிரிக்கெட் போன்றது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் இருக்கும் இந்தியாவின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல பொருட்கள் மீண்டும் ஒப்படைக்கப்படும் என அறிவித்தார்.
முன்னதாக, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் ஆஸ்திரேலியா பிரதமர் அல்பனீஸுடன் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவில் பரந்துவிரிந்து கிடக்கும் யுரேனிய இருப்பு, இந்தியாவின் அணு சக்தி பயணத்திற்கு வலுசேர்க்கும் என தெரிவித்தார். இந்தியாவில் துறைமுகம், விமான நிலையம், சாலை, ரயில்வே துறைகளில் தனியாருக்கான வாய்ப்புகள் மிக அதிக அளவில் இருப்பதாக மோடி அழைப்பு விடுத்தார்.
#WATCH | Prime Minister Narendra Modi and Australian Prime Minister Anthony Albanese share a selfie after participating in the India-Australia CEO Forum and Economic Roadmap Business reception
(Source: ANI/DD) pic.twitter.com/4hLYqTWUQa— ANI (@ANI) July 9, 2026
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
Jul 09, 2026 12:54 PM IST
“இந்தியாவின் அணுசக்தி பயணத்திற்கு ஆஸ்திரேலியா வலுசேர்க்கும்..” – பிரதமர் மோடி நம்பிக்கை


