அந்த நாள் இறுதியாக வந்துவிட்டது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் அபாடி அல்-ஜோஹர் அரினாவில் நடைபெற உள்ளது. ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, கிளென் மேக்ஸ்வெல், ஜோஸ் பட்லர், பில் சால்ட் ஆகியோர் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.110.5 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறைந்தபட்சம் ரூ.41 கோடியும் வைத்துள்ளன.

