Last Updated:
இணையதள பயன்பாட்டை குழந்தைகளுக்கு தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆபாச வீடியோக்களை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், பெற்றோரின் கண்காணிப்பை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது.
இணையதளத்தை குழந்தைகள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது..!
குழந்தைகளின் பாலியல் சுரண்டல், துன்புறுத்தல் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேநேரம், இணையதளத்தைப் பயன்படுத்துவது குழந்தைகளின் அடிப்படை உரிமை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், குழந்தைகளின் பாதுகாப்பும், அவர்களின் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று எதிரானதாகக் கருத முடியாது எனக் கூறினர்.
இணையதளத்தைப் பயன்படுத்த வயது அடிப்படையில் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பெற்றோரின் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டுமென தெரிவித்தனர்.


