• Login
Tuesday, September 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இடைத்தேர்தல்- 2 தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமல்: சட்டசபையில் புதிய அறிவிப்புகள் வெளியிட முடியுமா? … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 8, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
இடைத்தேர்தல்- 2 தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமல்: சட்டசபையில் புதிய அறிவிப்புகள் வெளியிட முடியுமா? … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக வென்ற தவெக காங்கிரஸ், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக மதுராந்தகம் மரகதம் குமர​வேல், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, பெருந்​துறை ஜெயக்​கு​மார், அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்பை​யா, விராலிமலை சி.​விஜய​பாஸ்​கர், கரூர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்​களின் ராஜி​னா​மாவை பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்​றுக் கொண்​டதையடுத்து அந்த தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டன.

ராஜினாமா

இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதியும் காலியானது. இதன்மூலம், மொத்தம் 7 தொகுதிகள் காலியாகின.இதனிடையே, அதி​முக கொற​டா​வின் உத்​தரவை மீறி பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்​சித்​ தாவல் தடைச் ​சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் ​கோரி அதிமுக சார்​பில் பேர​வைத் தலை​வரிடம் கடிதம் கொடுக்​கப்​பட்​டது.மேலும், கட்​சித் ​தாவல் நடவடிக்கை நிலு​வை​யில் இருந்து வந்த நிலை​யில் அதி​முக எம்​எல்​ஏ-க்​களின் ராஜி​னாமா கடிதங்​களை ஏற்று பேர​வைத் தலை​வர் பிறப்​பித்த உத்தரவை ரத்து செய்​யக் ​கோரி அதி​முக கொறடா எஸ்.எஸ். கிருஷ்ண​மூர்த்தி உள்​ளிட்​டோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​ தொடர்ந்​திருந்​தனர்.

இடைத்தேர்தல் நடத்த 5 தொகுதிகளுக்கு தடை இருப்பதால்,, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், 2 தொகுதிகளில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

சட்டசபை கடைசி நாள்;

நாளை பொதுத்துறை, சட்டமன்றம், ஆளுநர் – அமைச்சரவை மற்றும் ஓய்வூதியத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசிநாள் என்பதால் நாளை முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால், அறிவிப்புகள் வெளியிட முடியாது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அறிவிக்க முடியுமா?

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவதாவது; பிற மாவட்டங்களில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் அல்லது சலுகைகள், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி மக்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கவரும் வகையில் இருக்கக்கூடாது. மாநிலம் முழுமைக்குமான ஒரு பெரிய புதிய கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டால் இடைத்தேர்தல் தொகுதியையும் பாதிக்கும் என்பதால், அதுபோன்ற பெரிய அறிவிப்புகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அல்லது தேர்தல் முடியும் வரை தள்ளி வைக்க வேண்டியிருக்குமாம். அதே நேரத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களாக இருந்தால் அதை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை.

50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்ல தடை

இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்ல முடியாது. ஆங்காங்கே பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடைபெறும்.

Previous articleதண்டனைச் சட்டம், எம்.சி.எம்.சி சட்டத்தின் கீழ் ஹாடியிடம் விசாரணை நடத்தப்படும் – குமார்
tamiltamil



Read More

Previous Post

Gold Rate: வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்..!! குறைந்தது தங்கம் விலை..!! | Gold Prices Drop Again: 22K at ₹14,130/g in Chennai, Coimbatore, Madurai — Should You Buy Now?

Next Post

விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் படை! தலையைக்கூட உயர்த்த முடியாமல் 8 மாதங்கள் போராடிய இலங்கை இராணுவம்

Next Post
விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் படை! தலையைக்கூட உயர்த்த முடியாமல் 8 மாதங்கள் போராடிய இலங்கை இராணுவம்

விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் படை! தலையைக்கூட உயர்த்த முடியாமல் 8 மாதங்கள் போராடிய இலங்கை இராணுவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin